258 செய்வார்கள். குழந்தைகள் தூங்கிய பிறகுதான் விருந்து தொடங்கும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒரு. காரணம் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்கள் குடிக்க விரும்பாமையே. நான் குடிப்பதில்லை என்று தெரிந்ததும் பழச்சாறு கொடுத்தார்கள். அதன் பின்னர் ஒரு நாளேனும் குடிக் கிறீர்களா என்றும் என்னைக்கேட்டதில்லை. அவர்களும் எப்போதாவதுதான் குடிப்பார்கள். இரவு நான் படுக்கப் போகும்போது காயவைத்த (பிரிஜிடேரில் வைக்கப்பட்ட) தண்ணீரை ஒரு புட்டி எனக்குத், தருவார்கள். காயவைக்காத தண்ணீரைக் குடித்தால் இந்தியாவுக்கு வரும் அமெரிக்கருக்கு ஏதாவது ஒரு நோய் பரவிவிடுகிறதாம். செட்டிநாட்டைப் பற்றி எனக்குத் தெரியாமல் இருக்க லாம்; ஆனால் அவர்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. என்னுடைய படுக்கை அறைச்சாவியின் எண் 96. அந்தச் சாவியை ஒவ்வொரு இரவும் என்னிடம் தரும்போது 'செட்டி நாடு 96 ஊர்கள் அடங்கிய நிலப்பகுதி' என்பதை எனக்கு நினைவூட்டுவார்கள். 20,000 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருந்து வந்த போதிலும் அவர்கள் என்னிடம் அன்புடனும் மகிழ்ச்சியுட னும் பழகுகின்றனர். சீகல்மன் தம்பதிகளுக்கு செட்டிநாட்டுச் சிவப்பு ஓலைக் கொட்டான் மிகவும் விருப்பமான பொருள். அதன் கலை யழகைப் புகழ்ந்து அவர்கள் ஒரு நூல் எழுதினாலும் வியப் ல் பில்லை. ஒரு கொட்டானில் சில பழங்கள் வைத்து என்னை மாடிக்கு அனுப்புவது அவர்களுடைய அன்றாடப் பழக்கம். எங்கள் வாழ்வில் ஒரு நாள் முடிந்துவிட்டது! குட் நைட்!
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/260
தோற்றம்