38 அமெரிக்க அலுவலகங்களில் வேலை செய்யும் ஒவ்வொருவருக் கும் ஒரு பதவிப் பெயர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. "ரீடர்ஸ் டைஜஸ்ட்" பத்திரிகை, ஒவ்வோர் இதழிலும் தம் ஊழியர் ஒருவரைப் பற்றிய சிறு குறிப்பொன்று வெளியிட்டு, அவர்களைப் பெருமைப்படுத்துகிறது. குடியரசுத் தலைவரின் ஆணைப்படி இப்போது அமெரிக் காவில் குறைந்த சம்பளம் மணிக்கு ஒரு டாலர். இதனால் வாரத்துக்கு நாற்பது மணி நேரம் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு மாதம் ரூ 1500 கிடைக்கிறது; இதுவே குறைந்த சம்பளம், ஏதாவதொரு தொழிலுக்காகப் படித்த வர்களுக்கும், தொழில் அனுபவமுள்ளவர்களுக்கும் அதற் கேற்றபடி மிகுதியான சம்பளம் உண்டு; உணவு சாலைகளில் உணவு படைக்கும் பணிப் பெண்களுக்கும், வேறு பலருக்கும் உணவு உட்கொள்பவர் கொடுக்கும் அன்பளிப்பு மட்டும், நம் நாட்டில் அதே வேலை செய்பவருக்குள்ள சம்பளத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இருக்கும். சம்பளத்தின் கீழ்வரம்புப்படி எந்த அமெரிக்கத் தொழி லாளியும் ஒரு கிலோ சர்க்கரை வாங்க 5 நிமிடமும், கோதுமை ரொட்டி வாங்க 6 நிமிடமும், ஒரு பவுண்டு காப்பிக்கொட்டை வாங்க 23 நிமிடமும், ஒரு கோழி வாங்க 27 நிமிடமும், ஒரு பவுண்டு வெண்ணெய் வாங்க 40 நிமிட மும், ஒரு மாத வீட்டு வாடகை கொடுக்க 3 நாட்களும் வேலை செய்தால் போதும். அந்தக்காலத்துக்குள் இவை வாங்க வேண்டியதற்கான சம்பளத்தை இவன் பெறுவான். அமெரிக்கத் தொழிலாளியின் நற்குணத்தையும் பொருளா தாரச் செழிப்பையும் பின்வரும் இரு நிகழ்ச்சிகளும் எளிதில் விளக்குவன. ஒரு தொழிற்சாலையில் சம்பளம் கொடுத்த நாளில், ஒரு தொழிலாளி தன்னுடைய சம்பளத்தைக் காணாமற் போக்கிவிட்டான். உடனே, அவனுடைய தோழன் ஒருவன் தன் தொப்பியை எடுத்து எல்லோரிடமும் சுற்றி அனுப்பி
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/39
தோற்றம்