உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 னானாம். வார முழுவதும் வேலை செய்த தங்கள் சகோதரத் தொழிலாளியை வெறுங்கையுடன் மனைவி மக்களிடம் அனுப் யுவது முறையன்று என்று எண்ணி, ஒவ்வொரு தொழிலாளி யும் பைக்குள் கையைவிட்டு டாலர் பில்களை (கரன்சி நோட்டை அமெரிக்கர் பில் என்பர்) தொப்பியில் குவித்தார் களாம். இறுதியில், அந்தத் தொழிலாளிக்குத் தன் சம்பளத்தைவிடக் கூடுதலான தொகை கிடைத்து விட்ட தாம்! அமெரிக்க மோட்டார்த் தொழிற்சாலைகளுக்குத் தொழி லாளிகள் தம் இல்லங்களிலிருந்து சொந்த மோட்டார்க் கார்களிலாவது அல்லது சொந்த மோட்டார் சைக்கிள்களிலா வது வருவது வழக்கம். இதையொட்டி வழங்கும் ஒன்றுண்டு. அது வருமாறு: கதை ஓர் அமெரிக்கத் தொழிலாளி ரஷ்யாவுக்குச் சென்றான்; அங்கிருந்த ரஷ்யத் தொழிலாளி தொழிற்சாலை ஒன்றைக் காட்டி- "இது தொழிலாளரைச் சேர்ந்தது. இந்நாட்டில் எல்லாம் பொது உடைமை" என்று பெருமையாகச் சொன் னான். அங்கே நிற்கும் ஒருசில கார்கள் யாருடையன என்ற வினாவுக்கு, அவை தொழிற்சாலையை மேற்பார்க்கும் ஒரு சிலரைச் சேர்ந்தவை என ரஷ்யத் தொழிலாளி விடை பகர்ந்தான். சில வாரங்களுக்குப் பின்னர், அந்த ரஷ்யத் தொழிலாளி அமெரிக்கத் தொழிலாளியின் விருந்தினனாக வந்து, டெட்ராய்ட் நகரிலுள்ள ஒரு தொழிற்சாலையைப் பார்வையிட்டான். இந்தத் தொழிற்சாலை யாருடையது? என்று ரஷ்யத் தொழிலாளி கேட்டான். "தொழிற்சாலை முதலாளிகளைச் சேர்ந்தது; ஆனால் தொழிற்சாலைக்கு வெளியே நிற்கும் பல்லாயிரக்கணக்கான கார்கள் தொழி லாளருக்குச் சொந்தமானவை!" என்று அமெரிக்கத் தொழி லாளி கூறவே, ரஷ்யத்தொழிலாளி வாயடங்கிப் போனான். விரைவில் வளர்ச்சியடையும் பண்பாடு அமெரிக்கரின் குணச் சிறப்புகளை மேலும் கவனிப் போம். புதிய ஆராய்ச்சிகள் செய்வதிலும், முன்னமே பிறர்