40 செய்த ஆராய்ச்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுவதிலும் அமெரிக்கர் இணையற்றவர். கருத்துக்களை முதலிற் சொல் பவர் பிரிட்டிஷார்; ஆனால் அவற்றை நிறைவேற்றி வைப்பவர் அமெரிக்கரே. உதாரணமாகத் தொலைக் காட்சி (Television ஆராய்ச்சியில் பிரிட்டிஷார் முதன்மை வகித்தனர். 1946 இலேயே இதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிய அமெரிக்கர், 1978-60 400 தொலைக்காட்சி நிலையங்களை (Television Transmitters) நிறுவியிருக்கின்றனர். விரைவாக எதையும் செய்யும் அமெரிக்கரின் ஆற்றல் இதிலிருந்து புலனாகும். "அமெரிக்கர் சாலைகளில் நடப்பதில்லை: ஓடுகிறார்கள்!* என்று சொல்வதுண்டு. "நாம் நீரில் வாழும் உயிர்களைப் போல நீந்தவும்,பறவைகளைப் போல வானத்தில் பறக்கவும் கற்றுக்கொண்டுவிட்டோம். ஆனால் மனிதர்களைப் போலத் தரையில் நடக்க இன்னும் பழகவில்லை!" என்று ஓர் அமெரிக்கக் கட்டுரையாளர் வேடிக்கையாக எழுதியிருந்தார். "நன்றாயின் இன்றே செய்க", "இன்று என்பதும் நாளை என்பதும் இல்லை யென்பதற்கு அடையாளம்" என்பவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட அமெரிக்கர் உலகிலேயே உயரமான எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை 19 மாதங்களில் கட்டி முடித்தனர். ஒவ்வொன்றும் 10,000 டாலர் விலையுள்ள 16 லட்சம் வீடுகளை ஆண்டுதோறும் கட்டுகின் றனர். ஐக்கிய நாடுகள் சபைக் கட்டிடத்தை ஓராண்டுக் குள் கட்டி முடித்தனர். தாஜ்மஹாலைக் கட்டும் வேலை 20 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்றதையும் நாம் இங்கே நினைவிற் கொள்ளலாம். எவருக்கும், அவரவர் அளவுக்குச் சரியான உடைகளை ஐந்தாவது அவென்யூவிலுள்ள கடை களில் துணியைக் கொடுத்த ஒரு மணி நேரத்தில் தருகின் றனர். குறைந்த உறக்கம் அமெரிக்கரின் மற்றொரு குணம் அவர்கள் மிகக் குறைந்த நேரம் உறங்குவதாகும். ஓயாமல் வேலை செய்வதாலும், கவலை
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/41
தோற்றம்