42 எதிர்பார்க்கும் மனப்பான்மை, போதிய நேரம், பஞ்சம், குண்டு உள்ள சோடாப் புட்டிகள், பிளாட்பாரம் டிக்கட்டு கள், மாம்பழம், தணிக்கை அதிகாரி (Censor,) உணவுப் பங்கீடு, மாணவர் வேலை நிறுத்தம், மரியாதையைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் (Formality), சம்பிரதாயத்துக்காக வும் சட்டத்துக்காகவும் வேடிக்கையான காரியங்களைச் செய்வது, முடிவாகிவிட்ட விஷயங்களின் தகுதி- தகுதியின்மை பற்றி வெற்றுரையாடல். அமெரிக்கருக்கு விருப்பமானவை:- சுறுசுறுப்பான பேச்சு, தோட்டவேலை, இயற்கை அழகைக் கண்டு இன்புறுதல், பிளாஸ்டிக் பொருள்கள், சூயிங்கம் ("ChewingGum') என்னும் சுவைக்கும் மிட்டாய், உயிரைத் துரும்பாக மதிக்கும் இயல்பு, புள்ளிவிவரங்கள், இளமை, பலநிறங்கள், விஞ்ஞானப்புதுமை கள், ஊர் சுற்றுதல், தேனீவளர்த்தல், சோதிடம், பொருட் காட்சி மண்டபம், 'கோக்ககோலா' என்ற குளிர்ந்த பானம் நீராடும் அறை, விருந்தோம்பல், லாப்ஸ்டர். (லாப்ஸ்டர் என்பது நடக்கும் கால்களுடைய ஓர் உயிரினம்; பெரிய உருவ முடையது; பெருங்கடலில் பிடிக்கப்படுவது உணவாகப் பயன்படுவது.) அறிவுக்கு ஊக்கமூட்டும் வாய்ப்புக்களும், எதை எடுத் தாலும் ஆராய்ச்சி புரிந்து திட்டமிடும் மனப்பான்மையும் அமெரிக்கரிடம் உண்டு. மூன்றாண்டுகள் அமெரிக்காவிற் கல்வி பயின்றவரும், சத்துணவு ஆராய்ச்சி நிபுணரும் கோயமுத்தூர் ஸ்ரீ அவினாசிலிங்கம் மனை இயல் கல்லூரி முதல்வரும் ஆகிய டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் அவர்கள் கூறுவதுபோல், "அமெரிக்கா இன்று செல்வத்திலும் அறி விலும் மேம்பட்டு விளங்குவதற்குத் காரணம், ஆராய்ச்சி யினடியாகப் பிறந்த ஆதாரங்களை நடைமுறையில் வாழ்க்கை யின் இன்பங்களுக்காகப் பயன்படுத்துவதாகும். ஒழுக்கம் ஓங்கி உயர்வதற்கும், செல்வம் செம்மையுடன் பெருகுவதற் கும், கல்வி கசடற வளர்வதற்கும், அடிப்படையான ஆராய்ச்சி மிகவும் இன்றியமையாதது...... எவ்வளவுக்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/43
தோற்றம்