உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 களையும் உணர்ந்துகொண்டு, அவைகளுக்குத் தாம் எவ்வகை- யிலும் இடையூறாக இல்லாமல் வாழ்கின்றனர். வீட்டினுள் இருப்பது போலவே வெளியிலும் ஆணும் பெண்ணும் சரி சமானமாக வாழ்கின்றனர். மணமான பெண்களும் எல்லா வேலைகளிலும் இருப்பது கண்கூடு. ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் பெண்களும் செய்கின்றனர். இதனால் வீட்டு வேலையைப் பார்க்கும் பெண்கள் அதற்கெனத் தமக்கு ஒரு சம்பளத்தைக் கணவரிடமிருந்து பெற்றுக்கொள் கின்றனர்! வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைக் கணவன் தன் சொந்தச் செலவுகளுக்கு வைத்துக் கொள்வதும், ஒரு. பகுதியை மனைவிக்கு (வீட்டு வேலைக்குப் பதிலாக அந்த நேரத்தில் வேறுவேலை செய்தால் அவள் பெறக்கூடிய வரு வாய்க்கு ஈடாக)க் கொடுப்பதும், மூன்றாவது பகுதியிலிருந்து கணவனும் மனைவியும் குடும்பச் செலவு செய்வதும், பல அமெரிக்கக் குடும்பங்களில் வழக்கம். வீட்டு வேலை அமெரிக்காவில் என்னைக் கவர்ந்தவற்றுள் குறிப்பிடத் தக்கது, மிகச் சில வீடுகளில் மாத்திரமே வேலையாட்கள் இருப்பதுதான். சமையல் போன்ற எல்லா வேலைகளிலும் நமக்கு விருந்தளிக்கும் குடும்பத்தினருக்கு விருந்தினர் உதவி புரிவதும் அமெரிக்காவில் வழக்கம். வேலையாளின்றியே அமெரிக்கப் பெண்கள் குடும்ப வேலைகளைச் செய்வதற்கு உதவும் பல கருவிகள் உள்ளன. இவற்றுள் சில:- ரொட்டி சுடும் கருவி (Toaster), முட்டையை உணவாக்கப் பயன்படும் கருவி, உணவைப் பக்குவமான நிலையில் வைத்திருக்கும் கருவி (Electric Deep Freezer), வெண்ணெய் திரட்ட உதவும் கருவி, (Electric Churns), உண்ட கலங்களை கழுவ உதவும் கருவி (Electric Dish - Washer), ஐஸ் பெட்டி (Refrigerator) துணி துவைக்குங்கருவி, துவைத்த துணியைக் காயவைக்குங் கருவி, மின்சாரத் தையல் இயந்திரம் மின்சாரத்தால் வீட்டைத் தூய்மையாக்குங் கருவி (Electric Sweeper).