உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 குழந்தைகள் வேலையாளின்றியே அமெரிக்கப் பெண்கள் தம் வீட்டு வேலைகளைக் கவனித்து வருவதற்கு மற்றொரு காரணம், அவர்களுடைய குடும்பங்கள் மிகச் சிறியதாக இருப்பதே. இதனால் குடும்பத்தொல்லை குறைகின்றது. மிகுதியான மக்களைப்பெற்ற அமெரிக்கப் பெண் பெருமைப்படுவதில்லை; மிகுதியான நிறையுள்ள குழந்தையைப் பெற்றெடுப்பவள் தான் பிறர் பொறாமைக்கு ஆளாவதுண்டு. ஒவ்வொரு குழந்தையும் பிறந்த அன்றே நிறுக்கப்படுவதையும் இங்கே நினைவிற் கொள்ள வேண்டும். வாழ்க்கை இன்பமயமாக இருப்பதற்கும் வாழ்க்கை நிலை உயர்வதற்கும் குடும்பத்தில் குழந்தைகள் குறைவாக இருக்க வேண்டுமென்று அமெரிக்கர் நினைக்கிறார்கள். 67 கையாள நம் நாட்டிலும் வாழ்க்கை நிலை உயரவேண்டுமாயின் கருத்தடைக்கான சுகாதார முறைகளைக் வேண்டுவது மிகமிக இன்றியமையாதது. "இந்திய அரசினர் விஞ்ஞான முறைப்படி நடவடிக்கை எடுத்து, மக்கட் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த 1975-76-ம் ஆண்டுகளில் சில நடிவடிக்கைகள் எடுத்தனர்." அந்த தொடர்ந்து நடைபெறவேண்டும். முயற்சிகள் அமெரிக்காவில் குழந்தைகள் இல்லாதவர்களும்,ஆண் குழந்தைகள் மட்டும் உடையவர்களும் மற்றவர்களுடைய பெண் குழந்தைகளை எடுத்து வளர்ப்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கப் பெண்கள் குழந்தைகளை வளர்க்கும் முறையை யும் இங்கே ஆராயலாம். அவர்கள் குழந்தைகளைப் பய முறுத்துவதில்லை; குழந்தைகளின் மனத்திலிருந்து பயத்தைப் போக்க முயலுகின்றனர். ஆகாய விமானத்தைக் கண்டு பயம் ஏற்படுவதைத் தடுக்கத்தொட்டிலில் கிடக்கும் குழந்தை களுக்குப் பொம்மை ஆகாயவிமானங்களைக் கொடுக்கின்றனர். பள்ளிக்குச் சென்றதும் பொம்மை விமானங்களை அவர்