உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 களுக்குச் செய்து காட்டுகின்றனர். இவ்வாறெல்லாம் இயங் திரங்களில் குழந்தைகளுக்கு ஆர்வத்தை வளர்க்கின்றனர். குழந்தைகள், தம் விருப்பப்படி எந்தக்காரியத்தையும் செய்யவும், பெற்றோர்களின் இடையூறின்றி வாழவும் பல ஏற்பாடுகள் உள்ளன. ஆறு மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தனி அறைகளில் உறங்குவதும் அமெரிக்காவில் வழக்கமாயுள்ளது. கடவுளை வழிபட்டுத் தமக்கு வேண்டியதை எதிர்பார்க்கக் கூடாதென் றும், உழைப்பது கடவுள் வழிபாட்டுக்கு ஒப்பானதே என்றும் அமெரிக்கர் குழந்தைகளுக்கு வலியுறுத்தி வருகின் றனர். தமது உழைப்பால், மாலைப்பொழுதில் ஏதாவது ஒரு சிறு குற்றேவல் செய்து பொருள் ஈட்டுகின்றனர். அதில் ஒரு பகுதியை அமெரிக்கக் குழந்தைகள் தம் பெற்றோ ருக்குக் கிறிஸ்துமஸ் பெருநாளன்று அன்பளிப்பாகக் கொடுக்கப் பயன்படுத்துவதையும் நம்நாட்டவர் அறிந்து கொள்ளுவது இன்றியமையாதது. அமெரிக்கர் வீடுகளுக்கு நாம் செல்லும்போது, தங்கள் குழந்தைகள் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய பொருள் களைப் பெற்றோர்கள் பெருமிதத்துடன் காட்டுகின்றனர். எந்தத் துறையில் குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்கிறதோ அந்தத் துறையிலேயே அவர்களை ஊக்குவிக்கின்றனர். உனக்கு இதெல்லாம் வராது' என்று சொல்லி அவர் களுடைய அறிவு மழுங்கிவிடச் செய்ய மாட்டார்கள். வைத்தியரிடம் அவ்வப்போது குழந்தைகளை அழைத்துச் சென்று, தம் உடல் நலத்தைப்பேணும் நண்பர்தான் வைத்தி யர் என்று குழந்தைகள் உணரும்படி தாய்மார் செய்கின்றனர்; வைத்தியரைக் கண்டதும் பயப்படாதபடி குழந்தைகளைப் பழக்குகின்றனர்.