உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றால் 49 சிறுவயதிலேயே குழந்தைகள் பொறுப் யுணர்ச்சியுடன் நடந்து கொள்ளுகின்றனர்; வாழ்க்கை முறையை அனுபவத்தால் தெரிந்து கொள்ளுகின்றனர். குழந்தைகளின் சொந்த வளர்ச்சியை ஒருவரும் எவ்விதத் திலும் தடைசெய்வதில்லை. குடி ஆட்சி என்பது மற்றவரின் உரிமைகளை ஒப்புக் கொண்டு, தம் உரிமைகளையும் பாது காப்பதாகும். இக்கொள்கையில் அமெரிக்கர் குழந்தைப் பருவத்திலிருந்தே ஊறித் திளைக்கின்றனர். விளையாடும் போதுகூட இன்ன விளையாட்டே விளையாட வேண்டும். என்று அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை வற் புறுத்துவதில்லை. நகரசபையார் குழந்தை பிறந்த நாளைப் பற்றிய உறுதி மொழிச் சீட்டு (Birth Certificate) வழங்கும்போது குழந்தை வளர்க்கும் முறைகளை விளக்கும் புத்தகமொன்றையும் பெற் றோருக்கு இலவசமாக வழங்குகின்றனர். மூன்றாண்டு நிறைவெய்தும் வரையில் அமெரிக்கப் பெண் கள் தம் குழந்தைகளுக்கு வாரந்தொறும் கீழ்க்கண்ட உணவை ஊட்டுகின்றனர் : பச்சைக் காய்கறிகள் 1 கிலோ ... 99 சிட்ரஸ் பழமும் தக்காளிப் பழமும்... 1 பச்சைப் பட்டாணி, பேரீச்சம் பழம், பிற பழங்கள் தானியங்கள் மீன் எண்ணெய் உருளைக் கிழங்கு முட்டைகள் ... 1 99 29 99 99 29 (நாள்தொறும்) பால்(காப்பி அன்று)... 4 கோப்பை குழந்தைகள் விரும்பி உண்ணும்படி, கூடுமானவரை, லநிறங்களுள்ள உணவுகளை ஆக்குகின்றனர்.