54 களிலேயே இருக்க வேண்டுமென்று அமெரிக்க அரசியலை வகுத்தவர்கள் முடிவு செய்துள்ளதே. நம் நாட்டில் பம்பாயும் கல்கத்தாவும் போலவே அமெரிக்காவில் நியூயார்க்கும் பிரிஸ்கோவும் இருக்கின்றன. இந்த இரண்டுமே அமெரிக்காவில் பெரிய துறைமுகங்கள். இவை முறையே அட்லாண்டிக், பஸிபிக் கரைகளில் அமெரிக்காவின் தலைவாயில்களாக இருக்கின்றன. பம்பாயி லிருந்து அட்லாண்டிக் வழியாக நியூயார்க்கும், கல்கத்தா விலிருந்து பஸிபிக் வழியாகப் பிரிஸ்கோவும் சம தூரத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியா சான்பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா இராச்சியத்தின் முதன்மையான நகரம். கலிபோர்னியாவின் நிலப்பரப்பு 2,58,000 சதுர கி.மீ. அதாவது ஜப்பானுக்குச் சமமானது; தமிழ்நாட்டைப் போல மூன்று மடங்கு பரப்புடையது. அமெரிக்காவில் ஒவ்வொரு இராச்சியத்துக்கும் முத் திரை (Seal), கீதம், பறவை, கொடி ஆகியவை தனித் தனியே உண்டு. இவை போலவே ஒவ்வொரு கேலிப் பெயரும் உண்டு. * நியூயார்க் இராச்சியத்தின் கேலிப் பெயர் எம்பயர் ஸ்டேட் என்பது. கலிபோர்னியாவின் கேலிப் பெயர் கோல்டன் ஸ்டேட் என்பதாகும். தங்க மயமான இராச்சியம் என்பது இதன் பொருள். 1849 முதல் 1977 வரை 300 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் இங்கே தோண்டப் பட்டுள்ளது. தங்கம் கண்டு பிடிக்கப் பட்டதன் முதல் நூற்றாண்டு விழா 1949 இல் கலிபோர்னி யாவில் கொண்டாடப்பட்டது. பிரிட்டிஷாருக்கு 'ஜான்புல்" என்றும் ஜப்பானியருக்கு "நிப்பன் என்றும் கேலிப் பெயர்கள் இருப்பது போல, அமெரிக்கருக்கு "அங்கில் சாம்" (Uncle Sam) என்ற கேலிப் பெயருண்டு.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/55
Appearance