55 கலிபோர்னியாவுக்கு தங்கத்துக்கு அடுத்தபடியாகக் வருமானம் தருவது திரைப்பட உலகின் தலைநகராகிய "ஹாலிவுட்' என்னும் நகரமேயாகும். வகை வகையான பழங்கள் கலிபோர்னியாவில் செழிப்பாகப் பயிராகின்றன. இவற்றுள் பேரீச்சம்பழம், அத்தி, ஆரஞ்சு, சிட்ரஸ் (இது நாரத்தையைப் போன்றது), ஆப்பிள், அன்னாசி, திராட்சை, (ஓரளவு மாம்பழத்தின் சுவையை உடைய) பீச்சஸ் ஆகிய வற்றைக் குறிப்பிடலாம். சுருங்கச் சொன்னால், இங்குள்ள எல்லோரும் வாழ்நாள் முழுவதும் பழச்சாறையே குடித்துக் கொண்டிருக்கலாம். ள அமெரிக்காவின் மிக உயரமான மலையும் மிகப் பள்ள மான இடமும் (கடல் மட்டத்துக்கு 60 மீட்டர் கீழேயுள்ள "Death Valley' யில் வெப்பம் 133 டிகிரி வரை இருக்குமாம்.) இந்த இராச்சியத்தில் இருப்பதால், பலவிதமான தட்ப வெப்ப நிலைகள் இங்கே உள்ளன. புகழ் பெற்ற பத்திரிகை ஆசிரியர்களும், டென்னிஸ் ஆட்டக்காரர்களும், புலவர்களும் விஞ்ஞானிகளும் நிறைந்த கலிபோர்னியாவில், இதுவரை பதினொரு பேர் நோபல் பரிசு பெற்றிருக்கின்றனர். உலக அரசாங்கம் ஏற்பட வேண்டுமென்றும், அதில் அமெரிக்கா சேரவேண்டுமென்றும் பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்தது இந்த இராச்சியச் சட்ட சபையேயாகும். யாக இயற்கையழகு நிறைந்த கலிபோர்னியாவில் இன்றைய உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத பெட்ரோல் மிகுதி உள்ளது. அமெரிக்காவிலுள்ள 34 ஆயிரம் எண் ணெய்க் கிணறுகளில் மிகுதியானவை கலிபோர்னியாவிலும் அதையடுத்துள்ள டெக்சாஸ் இராச்சியத்திலுமே இருக் கின்றன. 'கலிபோர்னியா- டெக்சாஸ் எண்ணெய்க் கம் பெனி' என்பது தான் சுருக்கமாகக் கால் (CAL) டெக்ஸ் (TEX) என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறது. உலகிற் பெரிய பல்கலைக் கழகமும் இந்த இராச்சியத்திலிருக் கிறது; ஆகாய விமான ஆராய்ச்சியில் கலிபோர்னியாப் பல்கலைக் கழகம் முன்னணியில் நிற்கிறது.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/56
தோற்றம்