உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அமெரிக்காவின் அனைத்து இராச்சியங்களிலும் கலி போர்னியா இரு வி தங்களில் சிறப்படைந்துள்ளது. அவற்றுள் ஒன்று மற்ற இராச்சியங்களை விட இது (1054) மைல்) நீளமான கடற்கரையினை உடையது; மற்றொன்று இங்கே ஆண்டுதோறும் நாலாயிரம் பேர் கார் விபத்துக் களால் உயிரிழப்பது; மிகுதியான மோட்டார்க்கார்களுடைய இராச்சியமாகக் கலிபோர்னியா இருப்பதே இதற்குக் காரணம். கலிபோர்னியாவில் இந்தியர் கலிபோர்னியாவில் பல ஆயிரம் இந்தியர் வாழ் கின்றனர். இந்தியர் பீஜித் தீவில் குடியேறிய நாட்களி லேயே, இங்கேயும் குடியேறத் தொடங்கினராம். இப் போது கலிபோர்னியாவில் இருப்பவர்கள் வங்கப் பிரிவினை யின் போது இந்தியாவிலிருந்து சென்ற வங்காளிகளும் சீக்கியருமேயாவர். விவசாயத்திலும் சிறு வாணிபத்திலும் ஈடுபட்டு நல்ல வருவாயோடு வாழும் இந்த அமெரிக்கக் குடிமக்களிற் பலர் அமெரிக்கப் பெண்களையும், மெக்சிகோப் பெண்களையும் மணந்துள்ளனர். இந்தியரின் மனைவிமார் சங்கம் ஒன்றை இப்பெண்கள் பிரிஸ்கோவில் ஏற்படுத்தி யுள்ளனர். பாலங்களும் துறைமுகங்களும் 1 ம் பிரிஸ்கோ நகரத்தையும் அதையடுத்துப் (பசிபிக் கடலிலுள்ள) ஒரு தீவையும் இணைப்பது, 'கோல்டன் கேட் பாலம், பிரிஸ்கோவையும் ஒக்லண்டு என்ற இடத்தையும் பிணைப்பது 'ஒக்லண்டு குடாக்கடல் பாலம்.' இவ்விரண்டு பாலங்களும் பொறியியற் கலை அடைந்துள்ள மாபெரும் முன்னேற்றத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாக. விளங்குகின்றன. ஒக்லண்டு பாலம் எட்டேகால் நீளமானது; இதில் பாதி,பாம்பன் பாலம் போல, கடலுக்கு. மேல் கட்டப்பட்டிருக்கிறது. கோல்டன் கேட்பாலம் 16 கோடி மைல்