57 ரூபாய்ச் செலவிலும், ஒக்லண்டு பாலம் 85 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டவை. இவ்விரு பாலங்களும் எவரையும் எளிதில் தம் வயப்படுத்த வல்லவை இவற்றின் அழகில் ஈடுபடாதவர்களே கிடையாது என லாம். இவை உலகப் புகழ் பெற்றவை. எனவே பசிபிக் பெருங்கடல் வழியாகப் பிரிஸ்கோவுக்கு வருபவர்களின் கவனத்தை முதலிற் கவரக் கூடியவை இவையேயாகும். பிரிஸ்கோவின் துறைமுகம் மிகப் பெரியது; நகருக்குச் சிறப்பைத் தருவது. மாதந்தோறும் ஆயிரத்துக்கு மேற் பட்ட கப்பல்கள் இச் செயற்கைத் துறைமுகத்துக்கு வந்து செல்லுகின்றன. உலகின் பொது நகரம் டன் நியூயார்க்கிலிருப்பது போன்று பிரிஸ்கோவில் இட நெருக்கடி இல்லை, நியூயார்க் மக்களைவிடப் பிரிஸ்கோவில் வாழ்பவர்கள் இந்திய நாகரிகம்,கலை, பண்பாடு இவற்று மிகுதியான உறவு கொண்டவர்கள். நியூயார்க் வாசிகளை விடப் பிரிஸ்கோவர்களுக்கு அதிக ஓய்விருக் கிறது. பிரிஸ்கோவர்கள் பிறருடன் எளிதில் பழகும் இயல்புடையவர்கள். இவற்றிற்குக் காரணம் பிரிஸ்கோ வில் கிழக்கும் மேற்கும் சந்திப்பதேயாகும். பிரிஸ்கோவி லிருந்து ஐரோப்பாவைவிட ஆசியா அருகில் இருக்கிறது. மேற்கூறியவற்றால் அமெரிக்காவை நன்கு அறிய அங்கே செல்லும் இந்தியர்கள் பிரிஸ்கோ வழியாகச் செல்வது தான் பொருத்தமான தாகும். பிரிஸ்கோவின் பூகோள நிலைமையும் விசித்திரமானது. சீனாவும் ஜப்பானும் இந் நகரத்துக்குச் சிறிது தொலைவிலேயே மேற்குத் திக்கில் இருப்பதால், அவைகளை நெடுந்தூரக் கிழக்கு (Far East) நாடுகள் என்று பிரிஸ்கோவில் சொல்லுவது இயற்கைக்கு முரணானது. சில தலைவர்களைப் போலவே, சில நகரங்களும் ஒரு நாட்டுக்கு மட்டுமன்றி உலக முழுவதுக்குமே பொது
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/58
தோற்றம்