உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 என்பதையும் பிரிஸ்கோ சைனா -டவுனில் அறிந்தேன். ஒரு சைனா-டவுனை நிர்வகிப்பவர்கள் ஆறு கம்பெனிக்காரர்கள்: இவர்களுக்கும் பிரிஸ்கோ நகர சபைக்கும் நூற்றாண்டுக்குமுன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி சைனா -டவுனின் நிர்வாகத்தில் நகர சபையார் தலையிடுவதில்லை. காரணப் பெயர் பிரிஸ்கோ என்பது ஒரு காரணப்பெயர். "புனித பிரான்சிஸ் ஆப் அசிசி" என்பவர் கிறித்தவ மதத் தலை வருள் புகழ்பெற்ற ஒருவர்; அவர் பெயரால் இந்நகர் நிறுவப்பட்டதாம். பிரிஸ்கோவின் மிகப்பெரிய ஹோட்டலும் செண்ட் பிரான்சிஸ் ஹோட்டல் என்னும் பெயருள்ளது. இது 14 மாடிகளுள்ள கட்டிடத்தில் இருக்கிறது. இதன் எதிரில் யூனியன் ஸ்கொயர் என்னும் பூங்காவின்கீழ் நான்கு மாடிகளில் கார் நிறுத்த (Subterranean Garage) வசதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிஸ்கோவின் சிறப்புகள் யூனியன் ஸ்கொயரைச் சுற்றி நாற்புறமும் உள்ள பௌவல், கீயரி, போஸ்ட், ஸ்டாக்டன் தெருக்களில் மிகப் பெரிய கடைகளுள்ளன. இந்தப் பூங்காவுக்கு அண்மையில் மார்க்கட்ஸ்ரீட் என்ற பெரிய சாலை இருக்கிறது. புது டில் லிக்குக் கனாட் சர்க்கசும், சிங்கப்பூருக்கு ராபிள்ஸ் பிளே சும், லண்டனுக்குப் பிக்காடில்லி சர்க்கசும், நியூயார்க்குக்கு டைம்ஸ் ஸ்கொயரும்போல, பிரிஸ்கோவுக்கு மார்க்கெட் ஸ்ட்ரீட் முக்கியமானது. 120 அடி அகலமுள்ள இந்தச் சாலையில் விற்கப்படாத பொருளே இல்லை எனலாம். செல் வம் பொழியும் இந்தச் சாலை வழியாகச் செல்லாமல் பிரிஸ்கோவில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குச் செல்லு வது எளிதன்று. சான்பிரான்சிஸ்கோவின் சிறப்பான தொழில்கள் இறைச்சியைப் பக்குவப்படுத்துதல், மீன்பிடித் தல், சர்க்கரையைச் சுத்தம் செய்தல் ஆகியவை. பிரிஸ்கோ