60 8,30,000 மக்கள் வாழும் நகரம்; எழில் மிக்க காட்சிகள் நிறைந்தது: மாடமாளிகைகளும் சிறந்த கடற்கரையுமுடை யது. சாலைச் சந்திப்புக்களிலெல்லாம் பல நிறப்பூஞ்செடி களைப் பிரிஸ்கோவெங்கும் காணலாம். உலகிலேயே மிக. அழகிய நகரங்களுள் ஒன்றாகக் கருதத்தக்க பிரிஸ்கோவில் 50 மலைகளும் 100பூங்காக்களும் உள்ளன. இப்பூங்காக்களுள் ஒன்றான கோல்டன் கேட் பார்க் 1013 ஏக்கர் நிலப் பரப்புடை யது. இதனுள் இருக்கிற ஸ்டெயின்ஹார்ட் அக்குவேரியம் உலகிற் பெரிய மீன் காட்சிச் சாலையாகும். மற்றொரு பூங்கா ஷேக்ஸ்பியர் தோட்டம் என்பது; இத்தோட்டத்தில் ஷேக்ஸ்பியர் தம் நாடகங்களில் குறிப்பிட்டிருக்கும் எல்லா வகையான பூக்களும் உள்ளன. பிரிஸ்கோவின் மிகக் கூடுது. லான வெப்பம் 79 டிகிரி. இந்த வெப்பத்தைக்கூடத் தாங்க. இந்நகர மக்களால் இயலவில்லையாம்! பிரிஸ்கோவின் இயற்கை நிலையும் வேடிக்கையானது. இங்கே செயற்கைமழை மட்டுமே உண்டு; இயற்கை மழை சாதாரணமாகப் பெய்வ தில்லை. ஐ.நா.சபை கூடியபோது வழக்கத்துக்கு மாறாகச் சிறிது தூற்றல் இருந்ததாம்! கேபிள் - கார்" பிரிஸ்கோவைப் பற்றி எழுதும்போது, அந்நகரத்துக் கேபிள்காரைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. "முனிசி பல் ரயில்வே" என்றும் இதை அழைக்கிறார்கள். இஃது ஓர் அரிய போக்குவரவுக் கருவி. உலகிலேயே இங்கே மட்டுங் தான் இவ்வாகனம் இருக்கிறது. தோற்றத்தில் இது டிராம்காரைப் போன்றது. இது சரிவான மலைகளின் மீது ஏறுகின்றது. அம்மலைகளிலிருந்து இறங்கவும் இதனால் இயலும். கோச்சு வண்டியில் இருப்பதுபோன்ற மணி அடிக்கும் கருவியும் இவ்வாகனத்தில் உண்டு. மணிக்கு 9 மைல் வேகத்தில் செல்லும் இவை, இந்நகரில் மொத்தம் 26 மைல் தொலைவுக்கு ஓடுகின்றன. கேபிள்கார் ஏற்பட்ட வரலாறு நாம் அறியத்தக்கது. 1869-இல் ஐந்து குதிரை
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/61
தோற்றம்