உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மட்டுமே அவமதிப்பது அமெரிக்கர்களின் வழக்கம். குற்ற வாளிகட்கு அமெரிக்கச் சிறைச்சாலைகளில் எல்லாவித வசதி களும் செய்து கொடுக்கப்படுகின்றன. அவர்கள் வாழ்க்கை. யில் நன்னிலை அடையவும், ஏதாவதொரு தொழிலில் ஈடு படவும் சிறையிலிருக்கும் போதே கற்றுக்கொண்டு விடுகின் றனர். ஒரு முறைமட்டும் சிறைத் தண்டனையடைந்த பலர் கண்ணியமாக நடந்து கொள்ளுகின்றனர். சமூகத்தில் வேறு பாடின்றி சேர்த்துக்கொள்ளப்படும் முன்னாள் குற்றவாளி களிற் பலர், இப்போது பெரிய பதவிகளைச் சீருடனும் சிறப்புடனும் வகித்து வருகின்றனர். பிரிஸ்கோத் துறை முகத்துக்குச் சிறிது தொலைவிலுள்ள ஒரு சிறு தீவுக்குக் குற்றவாளிகள் அனுப்பப்படுகிறார்கள். அச்சிறையிலிருந்த போது அங்குள்ள நூல்நிலையத்திலிருந்த சட்டப் புத்தகங்க ளெல்லாவற்றையும் படித்த ஒரு குற்றவாளியே இன்று பிரிஸ்கோவின் தலைசிறந்த வழக்கறிஞராக விளங்குகின்றார்!" குபேரரும் முடிசூடா மன்னரும் 80 ஆண்டுகளுக்குமுன் 50 ரூபாயுடன் இத்தாலியிலிருந்து கியான்னினி என்பவர் பிரிஸ்கோவிற்குச் சென்று குடியேறி னாராம். தம் வீட்டில் இவர் ஐஸ்கிரீம் செய்து கொண்டிருந்த போது அடுத்த வீட்டுக்காரர் இவர் வீட்டுக்கு வந்து, இவர் தயாரித்த ஐஸ்கிரீமைத் தின்றுபார்த்து அதன் சுவையைப் பாராட்டினாராம். இந்தச் செய்தி தீப்போல் முதலில் வீடு வீடாகவும், பின்னர்த் தெருத் தெருவாகவும் பரவிற்றாம். அதன் பயனாக, கியான்னினி ஐஸ்கிரீமைப் பெரும் அளவில் செய்து கைவண்டியில் வைத்து விற்கத் தொடங்கினாராம். இவ்வாறு மேன்மேலும் தம் தொழிலை தம் தொழிலை விரிவுபடுத்திக் குபேரரான கியான்னினி இன்று பேங்க் ஆப் அமெரிக்கா என்னும் பேங்கின் தலைவராக இருக்கிறார். உலகில் தனிப் பட்டவர் நடத்தும் பேங்குகளில் இதுவே பெரியது, இந்த பேங்கில் ஒரு புதுமை என்னவெனில், ஒருசெண்டு மட்டும்