63 போட்டு, பள்ளிச் சிறுவர் கூடக் கணக்குகள் வைத்துக் கொள்ளலாம்! ஆனல் யாரை சாமிஷ் என்பவர் கலிபோர்னியாவின் முடிசூடா மன்னராக இருக்கிறார். இவருடைய செயல்கள் எல்லாம் இரகசியமானவை, மது விற்கும் 44,000 பேர்களின் சார் பாக இவர் கலிபோர்னியாவின் எல்லாப் பொது காரியங் களிலும் தலையிடுகிறார். இவர் ஒரு பதவியும் வகிப்பதில்லை. ஏழாம் வகுப்புக்குமேல் இவர் படிக்கவில்லை. துப்பறியும் தோழர் பலர் இவருக்கு உண்டு. எப்படி மடக்க வேண்டும் என்ற கலையில் சாமிஷ் மேதாவி யாம்; மிக்க நினைவாற்றல் உடையவராம். இவருடன் பழகு கிற ஒவ்வொருவருடைய பிறந்த நாளும் எப்போது வரு கிறது. அவர்களில் யார்யாருக்கு மண், பொன் போன்ற வற்றில் விருப்பம் என்பன வெல்லாம் இவருக்கு மட்டுமே தெரியுமாம். கடந்த 15 ஆண்டுகளாகக் கலிபோர்னியாவில் சட்ட சபைத் தலைவர் மேயர்,நீதிபதி, அட்வகேட் - ஜெனரல் போன்ற பெரிய பதவிகளையெல்லாம் இன்னார் இன்னாருக்குக் கொடுக்க வேண்டுமென்று இவர்தான் முடிவு செய்திருக் கிறாராம். கியான்னினி, சாமிஷ் என்பார் இருவர் கைக்குள்ளே தான் கலிபோர்னியா இருக்கிறது. பெண்கள் உலகிலேயே அழகாக உடை அணிபவர் இந் நகரத்துப் பெண்களேயாவர். 'அப்பேரல் சிடி' ('Apparel City') என்று ஒரு பகுதி பிரிஸ்கோவில் உளது. 34 ஏக்கர்ப் பரப் புள்ள இப்பகுதியில் உலகிற் பெரிய உடை உற்பத்திச்சாலை இருக்கிறது. சாலையின் அழகு பிரிஸ்கோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல் லும் 700 கிமீ நீளமுள்ள சாலை மிகப் புகழ் பெற்றது.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/64
தோற்றம்