உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அந்தச் சாலையில், 8பிரிவுகள் உண்டு; அதாவது ஒவ்வொரு திக்கிலும் 4பிரிவுகள் இருக்கின்றன. லாரி போன்றவைகளுக்கு ஒரு பிரிவும், மணிக்கு 65 கிமீக்குக் குறைவான வேகத்தில் செல்லும் கார்களுக்கு ஒரு பிரிவும் 65கிமீக்குமேல் 90 கி. மீ. வேகத்துக்குள் செல்லும் கார்களுக்கு ஒரு பிரிவும், மணிக்கு 90கிமீ வேகத்துக்குமேல் செல்லும் கார்களுக்கு ஒரு பிரிவு மாக நான்கு பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 700 கிமீ தொலைவு முழுவதும் ஒவ்வொரு 16 கி. மீட்டரிலும் ஒரு 'மோட்டல்' (Motel) இருக்கிறது. மோட்டாரிஸ்ட் ஹோட்டல் என்றசொற்களின் முதல் இறுதிப் பகுதிகள் சேர்ந்து இந்தச் சொல் அமைந்திருக்கிறது. மோட்டார் ஒட்டுபவர்களின் நலத்துக்காக அமைக்கப்பட்ட இவற்றில், ஏனைய ஹோட்டல் களிலுள்ள வசதிகளேயன்றிக் கார்களை நிறுத்தவும், செப்ப னிடவும் தக்க அமைப்புக்களும் உள்ளன. காருக்கு வேண்டும் பொருள்கள் விற்கும் பகுதியும் மோட்டலில் உண்டு. மக்களின் பண்பாடு ஏனைய அமெரிக்க மக்களைப்போலப் பிரிஸ்கோ வாசி களும் கல்வி, வைத்தியம், சட்டம், வீட்டுவேலை, தையல் வேலை, கெட்டுப்போன கருவிகளைச் செப்பனிடுதல் ஆகிய எல்லாம் தெரிந்து, உயிருள்ள கலைக்களஞ்சியங்களாகத் திகழ்கின்றனர். யாரையும் ஊக்கப்படுத்தும் குணமும், முயற்சியிலும் உழைப்பிலும் நம்பிக்கையு முடைய இந்த மக்களிடம் ஒரு வருக்கொருவர் உதவி செய்யும் மனப்பண்பும், எதையும் ஆராய்ந்தறிந்து திட்டமிடும் மனப்பான்மையும் உண்டு. பிரிஸ்கோ வாசிகள் வைகறையில் துயிலெழுவர்; காலை 6 மணிக்குமுன்பே பல்லாயிரம் கார்கள் பிரிஸ்கோவின் பல பகுதிகளிலிருந்தும் அந்நகரத்திலுள்ள பங்கு மார்க்கட்டுக்கு விரைகின்றன. நியூயார்க்கில் அட்லாண்டிக் நேரமும், பிரிஸ்கோவில் பசிபிக் கேரமும் அமலிலுள்ளன. இவ்விரண் டுக்கும் மூன்று மணிநேர வேறுபாடு உண்டு. இதனால்