65 நியூயார்க்கில் வால்ஸ்ட்ரீட் பங்குமார்க்கட் காலை 9மணிக்குத் திறக்கும்போது, பிரிஸ்கோவில் காலை 6மணியாயிருந்தும் அப்போதே பிரிஸ்கோவர்கள் தங்கள் பங்குமார்க்கட்டைத் திறக்க வேண்டியிருக்கிறது. பங்குமார்க்கட்டுடன் உறவுள்ள மிகப்பல அலுவலகங்களும் தம் வேலையை இந்த நேரத்தி லேயே தொடங்குகின்றன. பிரிஸ்கோவின் பங்குமார்க்கட் மண்ட்கோமரி தெருவில் இருக்கிறது. இந்தத் தெருவிலுள்ள ஹோட்டல்கள், கடை கள், அலுவலகங்கள் ஆகியவற்றிலெல்லாம் பேசப்படுவன யாவும் அமெரிக்காவின் மேற்குப் பகுதியையும், பசிபிக் கடலிலுள்ள நாடுகளையும் பாதிக்கின்றன. வராமரிப்புப் பள்ளி 5. கல்விமுறை அமெரிக்கக் கல்விமுறையின் அடிப்படை, பராமரிப்புப் பள்ளியே (Nursery School) ஆகும். அமெரிக்கர் தம் குழந்தைகளுடைய கல்வி முறையைப்பற்றி அக்குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே நினைத்துப் பல திட்டங்களும் செய்து விடுகிறார்கள். இரண்டு வயதிலேயே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். பெற்றோர் தொழிற்சாலைகளில் வேலை செய்யும்போது, அவர்களுடைய குழந்தைகளை இப் பள்ளி ஆசிரியர்கள் கவனித்துக் கொள்ளுகின்றனர். இங்கே குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவு கொடுக்கிறார்கள்; உடல்நலத்துக்கேற்ற பழக்கங்களை ஆதரிக்கிறார்கள். குழந்தைகள் தத்தம் விருப்பப்படி வளர்ச்சியடையத் தக்க சூழ்நிலையில் தூயகாற்றுள்ள தோட்டங்களில் இப்பள்ளி கள் அமைந்துள்ளன. நம்நாட்டில் சுகாதார வசதியுள்ள வீடுகள் மிகச் சிலவே. ஆதலின், குழந்தைகள் உடல்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/66
தோற்றம்