உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நலத்துக்கேற்ற கட்டிடங்களில் சிலமணி நேரமாவது கழிக்கம் பயன்படும் வகையில், பராமரிப்புப்பள்ளிகள் அமைய வேண்டும். அமெரிக்காவில், நாள்தோறும், இப்பள்ளிகளில் ல் ஆசிரியர்கள் குழந்தைகளின் உடல் நிலையைச் சரிபார்க் கின்றனர். சூடான சத்துள்ள சீருணவுக்குப் பின்னர், பிற்பகலில் சூரிய வெளிச்சத்தில் அவரவரின் வயதுக்கேற்ம ஒரு மணி நேரத்துக்குமேல் இரண்டுமணி நேரம்வரை அக்குழந்தைகளை இவ் ஆசிரியர்கள் உறங்கச் செய்கின்றனர். பலதரப்பட்ட சமூக அமைப்புக்களிலும், பொருளாதார நிலைகளிலும், பண்பாடுகளிலும் வளரும் குழந்தைகள் ஒருவர் போக்கை மற்றொருவர் அறிய இப்பள்ளிகள் உதவுகின்றன.. மற்றவர் தலையீடின்றித் தானே ஆராய்ந்து முடிவு செய்வதும், மற்றவர்களுடன் கூட்டுறவாகப் பல முயற்சிகளில் ஈடுபடு வதும் அமெரிக்கக் குடிஆட்சியின் சிறப்புகள். தன்னம்பிக்கை மற்றவர்களிடம் அன்பாக இருத்தல், கூரிய அறிவு, கூட்டுறவு, உயரிய நோக்கம், மன அமைதி, உண்மை, சமுதாய சேவை மகிழ்ச்சி, சுறுசுறுப்பு, நேர்மை, கடவுள் பக்தி, கீழ்ப்படிதல் நேரந்தவறாமை, கட்டுப்பாடு ஆகிய குணங்களே குடிமைப் பயிற்சிக்கு இன்றியமையாதவை என மாணவருக்கு வலி யுறுத்தப்படுகிறது. இதற்கு ஏற்பப் பராமரிப்புப் பள்ளிகள் நிறுவப்பட்டுச் சிறந்து விளங்குகின்றன. கிண்டர்கார்டன் பராமரிப்புப் பள்ளியிலிருந்து குழந்தைகள் கிண்டர் கார்டன் பள்ளிக்குச் செல்லுகின்றனர். மூன்றாண்டு முதல் ஏழாண்டுவரையுள்ள குழந்தைகளுக்கான இப்பள்ளிக் கூடங்களில், பந்து சக்கரம் வளையம் குச்சி போன்ற விளை யாட்டுக் கருவிகளைக் கொடுத்தும், படம் வரைந்து காட்டி யும்,நிறங்களைத் தீட்டிக்காண்பித்தும், களிமண்ணில் உருவங் கள் செய்துகாட்டியும், கதைகள் சொல்லியும் குழந்தைகளின் அறிவை வளர்க்கின்றனர். கீழ்க்கண்ட விஷயங்களை இங்கே சொல்லிக் கொடுக்கின்றனர்:- சிறப்பான நாட்களைக் கொண்டாடும் முறை, பொருள்களின் உருவங்கள், நிறவேறு