கூடிய 68 பல் போடப்பட்ட விளையாட்டு மண்டபமும் இருக்கிறது. நாட்டவரின் உடைகளைக் குழந்தைகள் நன்கு அறிவதற்காக, அவற்றை அணிந்த பொம்மைகள் இங்கே கொலுபோல வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் பிடித்து விளையாடக் உயிரினங்களும் உள்ளன. இங்கே மாவட்டம், இராச்சியம், நாடு, உலகம் இவற்றின் பரப்புக்களைக் குழந்தை கள் சரியாக அறியவேண்டும். ஆகவே, அமெரிக்கர் எல்லா வற்றையும் ஒரே அளவுள்ள படங்களில் குழந்தைகளுக்குக் காட்டுவதில்லை; அந்தந்தப் பகுதிகளின் இயற்கையான பரப்புக்கு ஈவான அளவுகளில் செய்த படங்களை வைத்துப் பூகோள் பாடங்கற்பிப்பதும் நாம் பின்பற்றத்தக்கது. இந்தியாவைப்பற்றிப் பூகோள பாடம் நடத்தும்போது, தேங்காயை உடைத்துக்காட்டி, இந்தியாவில் தென்னை மரங்கள் மிகுதியாக இருப்பதை மாணவர்க்கு அமெரிக்க ஆசிரியர்கள் வற்புறுத்துவார்கள். முழுத்தேங்காயைக் காண்பது அங்கே அரிது. சிறுவர்களுடன் பழகுவதற்குப் பொறுமை, அன்பு முதலிய நற்குணங்களும் வேண்டுமாதலால், இவை நிரம்பிய பெண்பாலரே இப்பள்ளிக்கூடங்களிலெல்லாம் ஆசிரியர் களாக இருக்கின்றனர். பிற சிறப்புக்கள் அமெரிக்காவில் அதன் குடியரசு அமைப்பின் (அரசியல் சட்டத்தின்) முக்கியமான பகுதிகளைப் பள்ளிக்கூட மாணவருக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள். இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மாணவர் தொகை கூடலாமென்பதை எதிர்பார்த்து, முன்னேற் பாடாகப் பள்ளிக்கூடக் கட்டிடங்களை இப்போதே அமெரிக்காவில் பெரிய அளவில் அமைத்து வருகிறார்கள்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/69
தோற்றம்