உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 பள்ளியில் இருக்கும்போதே மாணவர்கள் பத்திரிகை. படிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். தினசரிப் பத்திரிகைகள் குழந்தைகளுக்கெனச் சிறிய அளவில் தனிச்சஞ்சிகைகளை அச்சிட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் இதழுடன் கொடுக்கின்றன. இவையேயன்றி, பல நிறப்படங்களுடன், கதைகளும் அடங்கிய வெளியீடுகளும் குழந்தைகளுக்காக வெளியாகின்றன. பெரும்பாலும் தாய்தந்தையர் தம் குழந்தை களுக்குக் கொடுக்கும் முதற்பரிசு, குழந்தைகளுக்கேற்ற கலைக் களஞ்சியம் தான். , ஆசிரியர் கொடுக்கும் அடிப்படைக் கருத்துக்களின் சீரிய பொருளை மாணவர் தெளிவாக உணர்ந்து, தளராத ஊக்கத் தாலும் விடாமுயற்சியாலும் பயனடைகிறார்கள். மாணவரின் சுய உணர்ச்சியை வெளிப்படுத்தும் தன்மைக்கு அமெரிக்கக் கல்விமுறை மிக்க ஆதரவளிக்கிறது. இதனால், மாணவருக்கு ஆசிரியர்கள் நேரே சொல்லிக் கொடுக்கும் நேரத்தை விட மிகுதியான நேரத்தைப் பிறவகையில் அறிவைப் பெருக்கு வதில் அமெரிக்கக் கல்வி நிலையங்கள் செலவிடுகின்றன. விடுமுறை நாட்களில் சிறு தொலைவிலுள்ள ஓய்வு விடுதிக்கு மாணவர் உல்லாசமாய் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பள்ளிக்கூட நேரத்திற் பெரும் பகுதியை விஞ்ஞான மாண வர் ஆய்வுக் கூடத்திலும், மற்ற மாணவர் நூல் நிலையத் திலும் கழிக்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் மட்டுமன்றி கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் பெரிய நூல் நிலையங்களும் பொருட்காட்சிச் சாலைகளும் உள்ளன. குறைந்த செலவில் சிறந்த நூல்கள் அடங்கிய சொந்த நூல் நிலையம் வைத்திருக்கும் மூன்று மாணவர்களுக்கு ஒவ்வொரு வருக்கும் ஐம்பது டாலர் பரிசு அமெரிக்கக் கல்லூரிகளில் கொடுக்கப்படுகிறது. பல் புதிய சொற்களை அறியும்போது அகராதியை உடனுக் குடன் புரட்டிப் பார்ப்பது அமெரிக்கரின் வழக்கம்: இது இவர்களுடைய அறிவுப் பசிக்கு எடுத்துக் காட்டாகும். விலையுயர்ந்த சிறந்த நூல்களை யாவரும் படித்துப் பயன்