70 பெறுவதற்கு உதவியாகக் குறைவான விலையில் 25 சத்துக்கு அமெரிக்கர் 'பாக்கெட் புத்தகம்' வெளியிடு கின்றனர். பிரயாணத்திற் செலவிடும் நேரத்தை வீணாக் காமல், அப்போது படிப்பதற்கு உடன் எடுத்துச் செல்லச் சட்டைப்பையில் வைக்கத்தக்க அளவில் இருப்பதால், இப்புத்தகங்கள் இப்பெயர் பெற்றன. உயர்நிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் முதல் ஆண்டில் நகர ஆட்சி முறையும், இரண்டாம் ஆண்டில் உலக வரலாறும், மூன்றாம் ஆண்டில் அமெரிக்க நாட்டு வரலாறும், நான் காம் ஆண்டில் குடியரசும் வாழ்க்கை முறையும் கற்றுக் கொடுக்கிறார்கள். உயர்நிலைப் பள்ளிகளில் உணவு சமைத்தல், பின்னு தல், தைத்தல், துணி துவைத்தல், முதல் சிகிச்சை செய்தல், மின்சார அதிர்ச்சி ஏற்பட்டவருக்குச் சிகிச்சை செய்தல், குழந்தை வளர்த்தல், வீட்டை அழகுபடுத்துதல் ஆகியவற் றில் பயிற்சியளிக்கிறார்கள். அமெரிக்கக் குழந்தைகள்- இரு பாலாரும் - தாங்களே உணவாக்கி ஆண்டுக்கு இருமுறை பெற்றோர்களுக்குத் தங்கள் பள்ளிக்கூடங்களில் விருந்தளிக் கின்றனர். அமெரிக்காவின் பெரிய தொழிற்சாலைகள் தம் ஊழியர்க்கெனப் பயிற்சி நிலையங்கள் நட டத்துகின்றன. அவரவர் செய்யும் வேலைக்குத் தேவையான நுண்ணறிவைத் தொழிலாளர் பெறும்படி செய்வதே தொழிற்சாலைகளின் குறிக்கோள். பெண் கல்வி ஆடவருக்கும் பெண்டிருக்கும் உள்ள கல்வி முறையில் முக்கியமான வேறுபாடு ஒன்றும் இல்லாததும் கவனிக்கத் தக்கது. ஒரு சில இடங்களில் பெண்களுக்குத் தனிய க உயர்நிலைப் பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளன; எனினும், இருபாலாருக்கும் பொதுவான பள்ளிகள் மட்டுமே
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/71
தோற்றம்