உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 அமெரிக்காவெங்கும் மாணாக்கியரும் படுகின்றனர். உள்ளன. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஆண்களுக்குமட்டுமே கல்வி புகட்டப்பட்டது; இப்போது சேர்த்துக் கொள்ளப் விளையாட்டுகள் அமெரிக்கக் கல்வி முறையில் விளையாட்டுக்கு மிகுதியான சிறப்புக்கொடுக்கப்படுகிறது. அம்பெய்தல், துப்பாக்கியால் சுடுதல், மோட்டார் சைக்கிள் போட்டி, நீந்துதல் ஆகிய விளையாட்டுகளை அமெரிக்கர் விரும்புகின்றனர். டென்னிஸ் ஆட்டத்தில் சிறந்தவர்கள் கல்லூரிகளுக்கு வந்து மாணவருக்கு டென்னிஸ் சொல்லிக் கொடுக்கின்றனர். ஆகாய விமானம் ஓட்டிப் பழகுவதுதான் இப்பொழுது நூறாயிர மாணவர் ஆவலோடு பயிலும் விளையாட் பல் உாகும். இலையுதிர் காலத்தில் கால் பந்தாடுதலும், குளிர் காலத் தில் 'பாஸ்கட்பால்' ஆடுதலும் உறைந்த பனிக்கட்டியின் மீது ஹாக்கி ஆடுதலும், மூடுபனியில் வேறு பல விளை யாட்டுகளை ஆடுவதும் கோடிக்கணக்கான அமெரிக்கரின் வழக்கம். பாஸ்கட்பால் என்ற ஆட்டம் அமெரிக்காவிலேயே தோன்றியது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு 'பேஸ்பால்' ஆட்டம். இது அமெரிக்காவில் மட்டுமே சிறப்பாக ஆடப்படுகிறது. 30 மீட்டர் சதுரமுள்ள மைதானத்தில் இவ்விளையாட்டு நடைபெறுகிறது. இந்தச் சதுரத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு 'பேஸ்' இருப்பதாலேயே, இந்த ஆட்டம் இப்பெயர் பெற்றது. பந்தடிப்பவர் தம் மூலையைவிட்டு அடுத்த மூலைக்குச் சென்றதும் அவருடைய குழுவினரில் அடுத்தவர் வந்தடிக்கும் இடத்திற்கு வந்து, எதிர்க் குழு எறியும் பந்துகளைத்தடித்த கனமான மட்டையால் அடிப்பார். இவ்வாறு பந்தடித்துவிட்டு செல்வதில், நான்கு மூலையிலும் வந்தடிக்கும் குழுவின் நான்கு ஆட்கள் சேர்ந்தால் அவர்