72 களுடைய குழுவுக்கு ஒரு ஓட்டம் (ரன்) கிடைத்ததாகக் கருதம் படும். ஒவ்வொரு குழுவும் 9 தடவை மாறி மாறி பந்தடிப்பர். ஓராண்டில் 3, 4 மாதங்களுக்குப் பேஸ்பால் "சீசன்" நடைபெறுகிறது. வேனிற் காலத்தில்- மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை-பேஸ்பால்தான் அமெரிக் கரின் முக்கியமான விளையாட்டு. சிறந்த பேஸ்பால் ஆட்டக் காரருக்குச் சீசனுக்கு 30 ஆயிரம் டாலர் வரை கொடுத்து அவர்களுட்பட்ட கட்சிகளுக்கிடையே பந்தயங்கள் ஏற்பாடு செய்யும் குழுக்கள் அமெரிக்காவில் இருக்கின்றன. திரைப்பட நடிகர் நடிகைகளுக்குள்ள செல்வாக்கும் வருவாயும் பேஸ் பாலில் சிறந்த ஆட்டக்காரருக்கு உண்டு. ஓர் ஆட்டக்காரர் ஆண்டுதோறும் மூன்றறை லட்ச ரூபாய் ஊதியம் பெறுகிறா ராம்! மோட்டார்க்கார் ஓட்டும் பயிற்சியை பல ஆயிரம் உயர்நிலைப் பள்ளிகள் நடத்துகின்றன. ஆசிரியரும் உடனி ருந்து ஓட்டத்தக்க கார்கள் இப் பயிற்சியில் பயன்படுத்தப் படுகின்றன. இந்தக் கார்களை அமெரிக்க மோட்டார் சங்கத் தார் பள்ளிக்கூடங்களுக்குக் கொடுக்கின்றனர். ஓட்டம் பழகும் சாலைகளைப் பள்ளிக்கூடங்கள் தம் எல்லைக்குள் அமைத்துக் கொண்டுள்ளன. பல்கலைக் கழகங்கள் அமெரிக்காவில் பல்கலைக்கழகங்கள் அரசினரால் நகரசபை மட்டுமன்றித் தனிப்பட்டவர்களாலும், பல களாலும், கிறிஸ்தவ நிறுவனங்களாலும், தொழிலாளரின் கூட்டு முயற்சியாலும் நிறுவப் பட்டுள்ளன. அமெரிக்காவில் பெருஞ் செல்வ முள்ள ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு. ஜெனரல் எலக்ட்ரிக், வெஸ்டிங் ஹவுஸ், ஸ்டாண்டர்டு ஆயில், மெட்ரோபாலிடன் இன்சூரன்ஸ், புரூடன்சியல் இன்சூரன்ஸ், இண்டர்-நாஷனல் டெலிபோன், கோடாக், யூ. எஸ். ஸ்டீல் கார்ப்பரேஷன், மார்கன் ஆகிய வணிகக் குழுக்கள் தம் ஊதியத்தில் ஒரு பகுதியைக் கல்விக்கும் பிற
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/73
தோற்றம்