உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பணிகளுக்கும் கொடுத்து உதவியுள்ளன. கார்னேஜி என்பவர் 20 கோடி ரூபாயும், ராக்பெல்லர் குடும்பத்தார் 300 கோடி ரூபாயும் கல்விக்காகவும் உலக நாடுகளிடையே நல்லுறவை வளர்க்கவும் நன்கொடையாகக் கொடுத்திருக் கின்றனர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சிறிய நகரங்களிலும் உள்ளன. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் சேரும்போது மாணவர் சராசரி 18 வயதுடையவராக இருக்கின்றனர். மாணவருக்குத் தேர்வு நடத்திப் பட்டங்கள் கொடுக்கும் உரிமை அமெரிக்காவில் பல்கலைக் கழகங்களுக்கு மட்டு மன்றிக் கல்லூரிகளுக்கும் உண்டு. பல் கலைகளுக்கான கல்லூரிகள் ஓரிடத்தில் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதே அமெரிக்காவில் பல்கலைக் கழகத்துக்கும் கல்லூரிக்குமுள்ள வேறுபாடாகும். பகல் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் உயர் படிப்புப் பெறுவதற்கேற்பச் சில பல்கலைக் கழகங்கள் இரவிலும் நடைபெறுகின்றன. 9 மாணவர் பெறும் மார்க்கு எண்களைக் கொண்டு தேர்ச்சியை உறுதிசெய்யும் முறை அமெரிக்காவில் இல்லை. விடைத்தாள்களைத் திருத்தியபின், அவற்றை ஆசிரியர்கள் 'ஏ, பி, சீ ' என்று மூன்று வகுப்பாகப் பிரித்து மதிப்பிட்டு, 'சீ' வகுப்பைச் சேர்ந்தவர்களைத் தேர்ச்சி பெறாதவர் களாகக் கருதுகின்றனர். நேரத்தைப் பொன்னேபோற் போற்றும் அமெரிக்கர் தேர்வின் முடிவுகளையும் ஆகாய விமான விரைவில் தெரிவித்துவிடுகின்றனர். விடைத்தாள் களைத் திருத்தி அரைமணி நேரத்தில் முடிவைத் தெரிவுக்கும் இயந்திரங்களையும் கண்டுபிடித்து அவற்றைச் சில தேர்வு களில் பயன்படுத்தி வருகின்றனர் ! நூல்கள் வெளியிடும் வேலையை எல்லாப் பல்கலைக் கழகங்களுமே மேற்கொண்டுள்ளன. உலகின் பல் நாடு களைப் பற்றிய ஆதாரமான நூல்களைக் கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்டிருக்கின்றனர்.