உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் பெருமைக்கு இன் னும் ஒரு காரணம், அங்கே ஆசிரியரும் மாணவரும் நண்பர் போல நெருங்கிப் பழகுவதேயாம். அமெரிக்காவில் ஆசிரியரோ மாணவரோ வேலை நிறுத்தம் செய்வதில்லை என்பதும், மிகுதியான சம்பளம் பெறும் ஆசிரியர்கள் அவ் வருவாயில் ஒரு பகுதியை மாணவருக்குச் செலவிடுவதும் இங்கே குறிப்பிடத் தக்கவை. பல்கலைக் கழகங்களில் தலைவர், அதாவது துணை வேந்தர் பதவிக்கு அமெரிக்கர், சிறந்த அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடைய வாழ்நாள் முழுவதற்கும் அப்பதவியை உறுதிப்படுத்துகின்றனர். பயன்மிக்க பல வேலைகளைப் பல்லாண்டுகளுக்குத் திட்டமிடவும், அத்திட்டங் களை நிறைவேற்றவும் இந்த முறை உதவியாயிருக்கிறது. நாட்டின் பெரிய தலைவர்களும் அரசியல் வாழ்வோடு நின்றுவிடாமல், பல்கலைக்கழகப் பதவிகளையும், ஒத்ததாக மதித்துக் கல்வித் துறையில் பணியாற்றுகின்றனர். அமெரிக்காவின் தலைவர் பதவியை மறுத்துக் கொலம்பியா பல்கலைக் கழகத்துத் தலைவர் பதவியைத் தளபதி ஐசன் ஹோவர் ஏற்றுக் கொண்டதை இங்கே நினைவூட்டுவது பொருத்தமானது. அமெரிக்காவின் உலகிற் பெரிய நீர்ப் பாசனத் திட்டமாகிய டென்னசி பள்ளத்தாக்கின் வளத்தைப் பெருக்கும் குழுவின் (T.V.A.-Tennesse Valley Authority) தலைவரும், சிறந்த பொறியியல் வல்லார்களும் நோபல் பரிசு பெற்ற அறிஞர்களும் அமெரிக்காவில் கல்வித் துறையில் தொண்டாற்றி வருகின்றனர். அமெரிக்கக் கல்வித் திட்டத்தில், ஈராண்டுப் படிப்பு அல்லது மூன்றாண்டுப் படிப்பு என்று எந்தப் படிப்புக்கும் குறிப்பிட்ட கால வரையறை இல்லை. ஒவ்வொரு மாணவரும்