உலகிற் பெரிய பல்கலைக் கழகம் ஏக்கர். 76 கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தைப் பற்றிச் சில புள்ளி விவரங்களைக் குறிப்பிடலாம். அதன் பரப்பு 10404 விவசாயப்பண்ணையின் நிலப்பரப்பு 1650 ஏக்கர் வகுப்புகள் நிகழும் மண்டபங்களின் இடப்பரப்பு 41 ஏக்கர். கட்டிடங்கள் 640. ஆசிரியர்களின் எண்ணிக்கை 3235 மாணவர்களின் தொகை 53,600. நூல் நிலையத்திலுள்ள நூல்கள் 35 லட்சம்; அவற்றின் மதிப்பு நாலரை கோடி ரூபாய். தனிப்பட்டவர்களின் நன்கொடை 28 கோடி ரூபாய். ஓராண்டுச் செலவு 26 கோடி ரூபாய். இயந்திரங் களின் மதிப்பு 30 கோடி ரூபாய். நல்லெண்ணத்தை உலகின் பல நாடுகளுக்கிடையே வளர்க்கப் பல்கலைக் கழகம் சிறந்த கருவியாகும். இது பற்றியே பல நாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஆசிரியர்களை யும் மாணவர்களையும் தமக்குள் மாற்றிக் கொள்ள ஐக்கிய நாடுகள் சபை உதவி வருகிறது. வாழ்க்கை முழுவதும் கல்வி கல்வி என்பது கல்லூரியோடு அல்லது பல்கலைக் கழகத் தோடு முடிந்து விடுகிறதென்று நம் நாட்டில் பலர் கருது கின்றனர். ஆனால் நடக்கத் தெரிந்தவுடன் பள்ளிக் கூடத்துக்குச் செல்லும் அமெரிக்கக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் படித்த வண்ணமாயிருப்பதை நோக்கும் போது "யாதானு நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு" என்னும் திருக்குறள் நமது நினைவுக்கு வருகிறது. எவ்வளவு ஆண்டு நிரம்பியவராயினும், எவ்வளவு செல்வராயினும், எவ்வளவு வேலையுள்ளவராயினும், எவ்வளவு பெரிய பதவி யிலிருப்பவராயினும், எப்பாலாராயினும் நாள் தோறும் சில மணி நேரமாவது படிப்பிற்கெனச் செலவிடுவது அமெரிக்கர் பழக்கம்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/77
Appearance