77 6. வேளாண்மை அமெரிக்கா ஒரு விவசாய நாடு என்றால், அது பலருக்கு வியப்பாக இருக்கும். இயந்திர உதவியால் அமெரிக்காவில் செய்யப்படும் பொருள்கள் பெருவாரியாக இருப்பதால் அமெரிக்க விவசாயத் தொழிலின் முக்கியத்துவத்தை மறந்துவிட நேரிடுகிறது. அமெரிக்கரில், கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்பவர் தவிர, எஞ்சியவரில் மிகப் பலர் விவசாயிகளே. அமெரிக்கரில் ஐவரில் இருவர் சிற்றூர்களிலேயே வாழ் கின்றனர். வேளாண்மையே அமெரிக்கரின் சிறப்பான தொழில். விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை வகுக் காதவர்கள் அமெரிக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறுவது எளிதன்று. மற்றப் பொருள்களைப் போலவே உணவுப் பொருள் களையும் அமெரிக்கர் பெரும் அளவில் உற்பத்தி செய் கின்றனர். மேன்மேலும் ஆராய்ச்சி செய்து, அதன் பயனாய் விவசாயத்தின் தன்மையை மாற்றி அமைத்திருக்கின்றனர். உழவுத் தொழிலிலும் புதுப்புது இயந்திரங்களை உபயோ கித்து வருகின்றனர். அமெரிக்காவின் ஏற்றுமதியில் விவசாயப் பொருள்களும் ஒரு கணிசமான அளவுடையவை. கால் நடைகள் நம் நாட்டில் விவசாயத்திற்கு அடிப்படையாயிருப்பது கால்நடைகளேயாகும். இவை நாட்டின் சிறந்த செல்வம். இவற்றைத் தக்கபடி பேணுவதில் அமெரிக்கரை நாம் பின் பற்றலாம். அமெரிக்காவில் விவசாயப் பண்ணையொன்றுக்குச் சென்றபோது, அங்கே இருந்த கால்நடைகளின் நிலை எனக்கு வியப்பைத் தந்தது. அங்கிருந்த மாடுகள் ஒவ்வொன்றும் 500கிலோ நிறையில் யானைகளைப் போல் தோற்றம் அளித்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/78
Appearance