உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தன. அவைகளுக்குக் கொம்புகளைக் காணோம். 'காஸ்டிக் பொடாஷ்' என்ற இரசாயனத் தூளைத் தடவி கொம்புகள் வளருவதைத் தடுத்துவிடுவதாகக் கேள்விப்பட்டேன்.. எல்லா மாடுகளுக்கும் வைக்கோல், புல் என்பவற்றோடும் பார்லியும் சோயாபீன்சும் உணவாகக் கொடுக்கிறார்கள். வைக்கோல், புல், மக்காச்சோளம், கோதுமைத்தூள், வெல்லம் ஆகிய பொருள்களையெல்லாம் கலந்து உருட்டித் திரட்டி ஓர் உணவாக்கி அதையும் மாடுகளுக்குக் கொடுப்ப தாக அறிந்தேன். பசுமாடுகளைப் பேணும் விதத்தையும் நாம் அறிந்து கொள்ளவேண்டுவது இன்றியமையாதது. இவை நாள் தோறும் சவுக்காரம் (Soap) தேய்த்து நீரில் குளிப்பாட்டம் படுகின்றன. இப்பசுக்களின் கன்றுகள் உருவத்தில் மான் குட்டிகளைப் போல் இருக்கின்றன. அங்குள்ள பசுக்களின் மடி வண்ணான் மூட்டைபோலப் பெரிதாக இருப்பதையும் வியப்போடு கவனித்தேன். பசுக்கள் தின்பதற்காக ஆப்பிரிக்காக் கண்டத்தில் சூடான் நாட்டில் இருப்பதைப் போன்ற புல்லை அமெரிக்கர் பயிர் செய்கின்றனர். பிண்ணாக்கும், கோதுமைத்தவிடும் சில நவதானியங்களும் பழச்சாறும் பசுக்களுக்கு ஊட்டப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு பசு கொடுக்கும் பாலின் நிறையைக் கணக்கெடுத்து, அதில் நான்கில் ஒரு பங்கு எடையுள்ள தீனியை அப்பசுவுக்கு மறுநாள் வைப்பது அமெரிக்கரின் வழக்கம். உதாரணமாக, நேற்று 12கிலோ பால் கறந்த பசுவுக்கு இன்று 3கிலோ நிறையுள்ள தீனி வைப்பார்கள். அந்தப் பசு இன்று 9கிலோ பால் மட்டுமே தந்தால் நாளைக்கு அதற்கு 2கிலோ நிறையுள்ள உணவையே கொடுப் பார்கள். சுகாதாரமாக எவ்வேலையை செய்வதில் யாருக்கும் பின்வாங்காத அமெரிக்கர் பசுவின் பாலைக் கையால் கறப்ப தில்லை. பால் கறக்கும் கருவியிலுள்ள குழாயைப் பசுவின் மடியில் இணைத்து விடுவதே அவர்கள் கையாளும் முறைக்