உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சொல்லியதாவது: "இதுபோல் எங்கள் நாட்டில் நடந்தால், பெரிய குழப்பம் ஏற்படும்; எல்லோரும் கத்து வார்கள்; வேலை எதுவும் நடக்காது. பாலெல்லாம் பாழாகும். நாளெல்லாம் அதே பேச்சாகப் பேசுவார்கள்." அமெரிக்கர் கோழி வளர்ப்பதைப் பற்றியும் இங்குக் குறிப்பிடலாம். உருளைக்கிழங்கை உட்கொண்டால் அவை விரைவாக முட்டையிடுவதாக அமெரிக்கர் ஆராய்ச்சியால் அறிந்து, கோழிகளுக்கு உருளைக்கிழங்கை உணவாகக் கொடுக்கின்றனர். கோதுமை, சீமை அவல், மாமிசம், உயிர்ச் சத்துள்ள காய்கறிகள் ஆகியவை கோழிக்கு அமெரிக்கர் கொடுக்கும் மற்ற உணவுகளாகும். கோழியைப்போலச் சத்துள்ள உணவு கொடுப்பன வேறெவையுமில்லை என்பது அமெரிக்கரின் முடிவு. ஆகவே, நம் நாட்டிலும் கோழிகளைப் பேண, தக்க முயற்சியை மேற்கொள்ளுதல் உணவு உற்பத்தி இயக்கம் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகும். . பயிர்த்தொழிற் கல்வி மாண தொழில் துறைகளிற் போல, விவசாயத்திலும் அமெரிக்கா பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு ஒரு முக்கியகாரணம், அங்கே படித்தவர்கள் விவசாயத்தை இழிவான தொழிலாகக் கருதாமல், விவசாயப் பண்ணை களில் வேலை செய்வதையும் மதிப்பானதாகக் கருதுவ தாகும். 14 வயதுக்குமேல் 21 வயதுவரையுள்ள வர்கள் தங்களுடைய வாழ்க்கையை விவசாயத்துக்காக உரிமை ஆக்குகின்றனர். அமெரிக்காவின் வருங்கால உழவர் சங்கம் ("Future Farmers of America") ஒன்றை இந்த இளைஞர்கள் அமைத்து, கல்லூரிகள், அரசாங்கம் இவற்றி னிடமிருந்து பல உதவிகளைப் பெறுகின்றனர். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களிலும் விவசாயத்திற் கான மேற்படிப்புக்கள் பல உண்டு: விவசாயத்திற்குப் பயன்படும் ஆராய்ச்சிகளும் இவற்றில் நிகழ்கின்றன. உதாரணமாகக் கார்னல் பல்கலைக் கழகத்திலுள்ள விவசாய