உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 நிபுணர்கள் உருளைக்கிழங்குகளைச் சுய எடை (Specific Gravity) மூலம் வகையாய்ப் பிரிக்கும் ஒரு முறையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதன் பயனாகச் சுட்டு அல்லது அவித்து அல்லது வறுத்து உண்பதற்கேற்ற உருளைக் கிழங்குகள் அமெரிக்காவில் தனித்தனியாக விற்கப்படுகின் றன. பல ரகமான பஞ்சுகளின் தன்மையைப்பற்றி ஆராய நியூ ஆர்லியன்சிலும், மற்ற இடங்களிலும் சோதனைச் சாலைகள் சிறப்பாக உள்ளன. பஞ்சின் தகுதியையும் பயனையும் மிகுதியாக்குவதற்காகப் பல விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 'சிட்ரஸ்' என்ற பழத்தில் சேர்ந் துள்ள சத்துக்களைப் பற்றி ஆராய்வதற்குப் பிளாரிடாவில் ஒரு கழகம் இருக்கிறது. விவசாயப் பண்ணைகளைத் திருத்தியமைக்க அரசினர் விவசாயக் கல்லூரிகளுக்கு நிலங்களை மான்யமாகத் தரு கின்றனர். இந்த நில மான்யக் கல்லூரி (Land Grant வேலையாட்கள் பல் College) களிலுள்ள பணிகள் செய் கின்றனர். புட்டிகளில் அடைத்து உணவைப் பக்குவப் படுத்துவது, தளவாடச் சாமான்களைப் பாதுகாப்பது, தோட்டம் அமைப்பது, குருடருக்கு வழிகாட்டும்படி நாய் களைப் பழக்குவது ஆகியவை இவர்கள் செய்யும் பணி களிற்சில. விவசாயச் சந்தை அமெரிக்காவில் ஒவ்வோர் இராச்சியத்திலும் ஆண்டு தோறும் விவசாயச் சந்தை நடைபெறுகிறது. உழவர் தம் சிறந்த விளைவுகளை இச்சந்தையில் கொண்டுவந்து காட்டு கின்றனர்.நல்ல பழங்களையும் காய்கறிகளையும் இங்கே கொணர்ந்து, அவற்றை உணவாக்கிக் காட்டும் பெண் களுக்கும் கால்நடைகளைக் கவனமாகப் பேணும் உழவருக்கும் பல பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. உழவுத் தொழிலுக்குப் பெயன்படும் புதிய கருவிகளையும் இயந்திரங்களையும் உற் அத்தி செய்பவர்கள் இந்தச் சந்தையில் அவற்றை இயக்கிக்