84 சில்லறைக் கடைகள் உபயோகிப்பவர்களுக்கு விற்கும் பொருள்களை ஸ்தாபனங்களைச் சில்லறைக் கடைகள் என்று நாம் சொல்லு கிறோம். இவற்றில் உலகிலேயே பெரியது 'மேசீஸ்' என்ற கடை. மேசீஸ், நியூயார்க்கின் முச்சந்தியொன்றில், பல மாடி களுள்ள கட்டிடத்தில் இருக்கின்றது. மேசீஸ் ஓராண்டுக்கு 3 மிலியன் டாலரை விளம்பரத்திற்காகச் செலவிடுகிறதாம். மேசீஸிலேயே தபால் தந்தி நிலையங்களும், டெலிபோன் அலுவலகமும், பல மாடிகளில் உணவுச் சாலைகளும் இருக் கின்றன. பிற கடைகளில் பொருள்கள் ஒவ்வொன்றையும் என்னென்ன விலைக்கு விற்கிறார்கள் என்று அறிய வாரந் தோறும் தம் வேலையாட்கள் வாயிலாக 40,000 வகையான மேசீஸ் பொருள்களை அக்கடைகளிலிருந்து கடையினர் விலைக்கு வாங்குகிறார்கள். இவ்வாறு மற்றவர்களின் விலையைத் தெரிந்த பின்னர், எந்தப் பொருளையாவது அந்த விலைக்கோ அதற்குக் குறைத்தோ விற்க இயலாவிட்டால், அப்பொருளை மேசீஸ் கடையினர் தம் தொழிலிலிருந்து நீக்கி விடுவராம். 6 ஆகாய மேசீஸில் நாள்தோறும் ஒரு மிலியன் டாலருக்கு நடக்கிறது. வியாபாரம் கடையில் இந்தக் விமானங்கள் கூட விற்கப்படுகின்றன. பிளாஸ்டிக், அலுமினியம் இவற்றால் தயாரிக்கப்பட்டதும் 25 அடி நீளமும் 8அடி அகலமும் 3500 பவுண்டு நிறையும் உள்ளதும் சக்கரம் வைத்து நகருவதுமான ரெடிமேட் வீடுகளையும்' இந்தக் கடையில் வாங்கலாம். ஒரே நாளில் 12,000 டை (Tie- கழுத்தில் அணியும் ஒரு சிறு பட்டி) விற்றார்களாம். மற்றொரு நாள் இரண்டு மணி நேரத்தில் ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள ரவிக்கைத் விற்றார்களாம். இந்தக் கடைக்குப் பொருள்கள் வாங்குவதற்காக 16 நாடுகளில் சொந்த ஆட்கள் இருக்கிறார்களாம். அமெரிக்கர் விரும்பும் துணி
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/85
தோற்றம்