85 மாதிரிகளில் சமையல் பாத்திரங்களைத் தயாரிக்க டோக்கியோவிலுள்ள மேசீஸ் ஏஜண்டு ஜப்பானியருக்குப் பயிற்சி அளிக்கிறாராம். தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றும், துணி உற்பத்தித் தொழிற்சாலைகள் பலவும், பழத் தோட்டங் களும் இக்கடைக்கு உரிமையாக இருக்கின்றன. இவை மூலம் கிடைக்கும் பொருள்களை இக்கடையில் மலிவான விலைக்கு விற்கிறார்கள். நாள்தோறும் தந்தி மூலம் 2500 ஆர்டர்களும், டெலிபோன் மூலம் 20,000 ஆர்டர்களும் இக் கடைக்குக் கிடைக்கின்றனவாம். தாம் வாங்கக் கூடிய பொருள்களின் விலைக்கு முன்பணம் கொடுத்து இரண்டரை லட்சம் பேர் மேசீஸ் கடையில் கணக்குகளை வைத்திருக் கின்றனராம். தாம் விற்கும் மருந்துகளைச் சோதிக்க இங்கே ஒரு சோதனைச் சாலை இருக்கிறதாம். உற்பத்தியாளரிட மிருந்து இவர்கள் வாங்கும் சாமான்களின் தரத்தை முடிவு செய்ய இக்கடையில் ஒரு நிலையத்தைச் சொந்தமாகவே வைத்திருக்கின்றனர். வாணிக முறை பல லட்சம் ரூபாய்கள் பெறுமானமுள்ள பொருள்கள், சாலையில் செல்லுவோருக்குத் தெரியும்படியாகக் கண்ணாடி அமைக்கப்பட்ட அறைகளில் அல்லும் பகலும் வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கண்ணாடிகளை யால் உடைத்துப் பொருள்களை எடுத்துக்கொண்டு யாரும் போய் விடலாம். ஆனால், அவ்வளவு துணிவுடையோர் அமெரிக்கா வில் இல்லை. எல்லாக் கடைகளிலும், உள்ளே சென்றவுடன் என்னைக் கவர்ந்தது. யாருக்கோ வந்த விருந்து என்று இராமல், பல வேலையாட்கள், ஒருவருக்குப்பின் ஒருவராக வந்து, உங்களுக்கு என்ன வேண்டும்? எங்களில் வேறு யாராவது உங்களைக் கவனித்து வேண்டுவன செய்கிறார்களா? நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய இயலும்?" என்றெல்லாம் 44
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/86
Appearance