பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


தற்பொழுது இந்த இசைவிழா அமெரிக்காவிலே சிறந்ததொரு விழாவாக மதிக்கப்படுகிறது. இந்த இசை விழாவிலே பெயர்பெற்ற இசைவாணர்கள் கலந்து கொள்வர். அது மட்டுமன்று ; ஒவ்வொரு விழாவிலும் புதிதாக இயற்றப் பட்டபாடல்களும், கண்டுபிடிக்கப்பட்ட இசை வகைகளும் பாடப்பெற்றன. அவ்வாறு பாடப்பட்டவற்றில் ஒன்று "கவிஞனின் மூன்று ஞாயிறுகள்" என்பதாகும். அதற்குப் பத்து நடனமாதரும், ஒன்பது இசைக்கருவிகளும், பிற சிறுசிறு இடைப்பாட்டுக்களும் தேவை. திறனாவாளர்கள் இந்தப் பாட்டை வானளாவப் புகழ்ந்தனர். இந்தப்பாட்டில் ஒரு கதை உண்டு. அது அங்கதப் பொருளுடையது. இந்தக் கதை ஒரு கவிஞனின் கனவுகளையும், கவலைகனளையும் சித்தரிக்கின்றது. அவரது இளமை, வாலிபம், முதுமை ஆகிய மூன்று பருவங்களே இந்தக் கதையின் கூறுகள்.

இவ்வாறு இசைஇசைவிழாக்களை நடத்தல், தனி இசை வாணரை ஆதரித்தல், புது இசைப் பாக்களே ஆக்கல் ஆகியவற்றேடு கோலிட்ச் நிறுவனம், கல்லூரிகளிலும்,பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்ளிலும், பொது நூலகங்களிலும் இசையரங்கு நடத்தி வருகின்றது. இத்தகைய வெளி நிகழ்ச்சிகள் ஆண்டுக்கு 25 முதல் 50 வரை வசதிக்கேற்றவாறு நடைபெறும். இதுவரையிலும் இந்த நிறுவனத்தின் கீழ் 800க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிக்கு விட்டல் என்ற அம்மையார் ஏற்பாடு செய்துள்ளார். கோலிட்ச் நிறுவனம் ஏற்பட்டுப் பத்தாண்டுகள் சென்ற பின் விட்டல் (Whittall) அம்மையார் காங்கிரசு நூலகதின் மூலம் விலை மதிக்கவொண்ணாப் பல இசைக் கருவிகளை மக்களுக்கு அளித்துள்ளார். அக்கருவிகள் கருவி கலைஞரால் செய்யப்பட்டவை.

இந்த இசைக் கருவிகள் காட்சிக்குப் பொருளாகாமல் மக்களுக்குப் பயன்படுவதற்காக 1985ஆம் ஆண்-