பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் பண உதவி செய்கின்றனர். அப்படி இருந்தும், அம் மக்கள் நியூயார்க் பொது நூலகத்தாரிடம் பெற்றிருக்கும் கடனை அடைக்க முடியாது. அதாவது, அவர்கள் நூலகம் மூலமாகப் பெற்று வரும் அறிவு வளர்ச்சியை அளவிட்டுக் கூற இயலாது.

அரசாங்கமும் இந் நூலகத்தால் பெரிதும் பயன்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் தலைமைச் சபை இந் நூலகத்தின் துணையின்றிப் பலவிடயங்களில் ஒரு முடிவும் காண இயலாது. இரண்டாம் உலகப் போரில் இராணுவ அலுவலகத்தார் இந்நூலகத்தினின்று உலகப் படம், வேறு சில முக்கியக் குறிப்புக்கள் ஆகியவற்றைப் பெற்றனர். உணவுப் பொருட்களினின்று நீர்ச் சத்துக்களே வடிப்பது பற்றிய முறையை இந் நூலகத்தின் விஞ்ஞானப் பிரிவினின்று அரசாங்க விஞ்ஞானிகள் பெற்றனர். இவ்வாறாகப் பல துறையினர்க்கும் செய்திகள் வழங்கி உதவுவதில் இந் நூலகத்திற்கு இணையொன்று மில்லை என்று துணிந்து கூறலாம். அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் இந் நூலகத்தைப் பெரிதும் பயன்படுத்துகின்றன. உதாரணமாக அமெரிக்கர்கள் செளதி அராபியாவின் எண்ணெய்க் கிணறுகளில் முதலீடு செய்வதற்கு முன்னர் ஆறுமாத காலம் இந் நூலகத்தின் பொருளாதாரப் பிரிவில் விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆராய்ந்த பின்னரே தங்கள் முடிவைத் தெரிவித்தனர்; பெரு நன்மையும் அடைந்தனர்.

இந் நூலகத்தால் பொது மக்கள் பெறும் எல்லா நன்மைகளையும் எடுத்துக் கூறுவது இயலாத காரியமாகும். எனினும் ஒருசில குறிப்பிடத் தகுந்தவையாகும். ஒரு தடவை வில்லியன்கிஷ் என்பவர் காமிலி (Camille) என்ற நாடகத்தின் மறு பதிப்பினை எழுதுகையில், 1853-இல் நடைபெற்ற அதே நாடகத்தின் படி இந்-