பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15. கம்பரும் நண்பரும் உலாப் போந்த காதை

அம்பிகா பதியின் அழிசெயல் எண்ணிக்
கம்பர் ஒருநாள் பிற்பகல் கவன்று
வீட்டில் சோர்வோ டிருந்த வேளை,
ஈட்டரு நிதியென இரும்புகழ்ப் பண்பினர்

5 கம்பரின் நண்பர் கண்ணனார் வந்தார்.
நண்பர் இருவரும் நனிமகிழ் வுற்றே
என்பும் உருக இறுகப் புல்லி ஒருவரை யொருவர் உளங்கொளத் தழுவினர். கம்பரின் தோற்றம் நண்பர் நோக்கினர்;

10 முகத்தில் தெளிவிலை முதலதற் கென்னென
அகத்தில் உள்ளதை அவர்நனி வினவினார்.

(கம்பர்)

அம்பிகா பதியின் அடாச்செயல் நினைத்து
நண்பரே உள்ளம் நனிமிக வருந்துவல்
திறந்த வெளிமனைத் திண்ணையில் படுக்கிருன்

15 மறைந்து விடுகிறான் மையிருள் நள்ளிரா
இதனைப் பொறுக்க என்னால் இயலுமோ?
மதன்கணை தொடுத்து மயக்குவான் போலும்!
இதனால் கவல்கிறேன் என்றார் கம்பர்.

(நண்பர்)

பசித்தால் உணவு புசிக்கத் தருவோம்

20 நசித்தால் உடம்பு நல்குவோம் மருந்து


2. கவன்று கவலைப்பட்டு 4. ஈட்டரு - தேடுதற்குஅரிய. 7. என்பு - எலும்பு; புல்லி - ஆணைத்து. 10. முதல் - காரணம். 15, மையிருள் - கரிய இருள். 17. மதன் - மன்மதன்; கணை - மயக்கும் மலராகிய அம்பு. 20. நசித்தால் - கெட்டால்.