பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அம்பிகாபதி காதல் காப்பியம்

90 உயிர்தமைப் படைத்ததா லன்றோ உலகம்
வேண்டி யுள்ளது; வேண்டுமோ உயிர்கள்?
உயிர்களை உலகிற் கனுப்புவ தேனோ?
உயிர்களை அவர்தம் முடனிருத் தலாமே !
அனைவரும் வீடுபே றடையச் செய்ய

95 நினையின் கடவுள் நேர்த்தியாய் முடிக்கலாம்;
என்று மொழிய, இறுப்பார் கம்பர்:
தெய்வம் தொழாஅரும் தீவினை யாளரும்
எய்தல் வீடுபே றெங்ங்னம்? சொல்கென,

(நண்பர்)

தாயின் பாலைத் தான் பெறு தற்குச்

100 சேயும் கையூட்டு செய்ய வேண்டுமோ?
எல்லாம் வல்லவர் எம்பெரு மானென
எல்லாரும் உளறுவ தியற்கையாய் விட்டது.
எல்லாம் வல்ல இறைவர் உலகில்
சில்லோர் தீவினை செய்ய வைப்பதேன்?

105 எல்லாரும் நல்வினை இயற்றச் செயலாமே!
“உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட் டுடையார் அவர்”
என்றுநும் இராம காதை நூலில்

110 நன்றாய்ப் பாடி வைத்துளிர்; நல்லது!
ஆக்கிய உலகை அழித்தல் ஏனோ?
அழிக்கும் பொருளே ஆக்குதல் எதற்கோ?
வேண்டா உலகில் வேண்டா உயிர்களை
வேண்டா தேபடைத் திருத்தல் வேண்டா.

115 இளமையும் யாக்கையும் என்றும் நில்லா
வளமை யோடு வாழ்வும் நில்லாது
ஒவ்வோர் உயிரும் வாழ்க்கையில் படுஉம்


100. கையூட்டு - இலஞ்சம். 109. இராம காதை - இராமாயணம்.