பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கம்பரும் நண்பரும் உலாப் போந்த காதை


நன்றவ் வாறே நடந்துள திங்கணும்:
பாட்டும் முழவுமாம் பக்க இசைகள்
ஆட்டுக் கேற்ப அமைந்தன காண்கென,

(நண்பர்)

70 மந்தி காண்பதாய் மணிமேகலை கூறும்
இந்த ஆட்டம் காணுநாம் இருவேமும்
மந்தி களோவென மற்றவர் வினவ,
‘கலகல’ நகைப்பு கான்றே இருவரும்
அலகிலா உவகை ஆழியுள் ஆழ்ந்தனர்.

(கம்பர்)

75 இயற்கைக் காட்சியில் இன்புறுஉம் கம்பர்,
செயற்கையில் இந்நிலை சிறிதும் அமையுமோ?
கடவுள் படைப்பின் கற்பனை நம்மால்
தொடவோ உலகைத் தோற்றவோ இயலுமோ?
என்று கம்பர் இயம்ப, நண்பர்,

80 நன்று நன்று நீவிர் நவில்வது!
உலகையேன் கடவுள் உண்டாக்க வேண்டும்?
அலகில் உயிர்களை ஆக்குதல் எதற்கோ?
என்று வினவ, இறுப்பார் கம்பர்:
உயிர்கள் உய்ய உலகம் படைத்தார்

85. செயிர்திர் பொருள்களும் செவ்விதின் அருளினர்.
நல்வினை யாற்றின் நல்வீடு பெறலாம்
அல்வினை புரியின் அளறே கிடைக்கும்;
என்ற கம்பர்க் கினிய நண்பர்,
உயிர்கள் உய்ய உலகம் எதற்கு?


69. ஆட்டு - ஆட்டம். 73. கான்று - வெளிப்படுத்தி. 74. அலகிலா - அளவில்லாத; ஆழி - கடல். 85. செயிர் - குற்றம். 86. வீடு - மோட்சம். 87. அல்வினை - நல்வினை அல்லாத தீவினை; அளறு - நரகம்.