பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கம்பரும் நண்பரும் உலாப் போந்த காதை

105.

நல்லதே யாகுக என்று நவின்று
மெல்லியல் நல்லார் மின்விளக் கேற்றினர்;
ஞாயிறு மெல்ல நழுவிய ஞான்று

175 கோயிலுக் குச்சிலர் கும்பிடப் போந்தார்;
தொழிலகந் தன்னில் தொழிலே முடித்தபின்
எழிலுற மண்ண ஏகினர் சிலரே;
அரும்பொருள் விற்கும் அங்காடி நோக்கிப்
பொருள்பல வாங்கப் போயினர் சில்லோர்;

180 வேலை முடித்தபின் விரும்பிக் குடிக்க
மாலை மதுக்கடை மன்னினர் சிலரே;
பல்வகை அரங்கில் பாங்குறு கலைதமை
நல்வகை சுவைக்க நண்ணினர் சில்லோர்;
கம்பரும் நண்பரும் காட்சிகள் கண்டே

185 இன்புறுTஉம் உளத்தொடு ஏகினர் இல்லமே


173. மெல்லியல் நல்லார்-மென்மைத் தன்மையுடைய மகளிர்; மின் விளக்கு - ஒளிதரும் விளக்கு. 177. மண்ண - ஒப்பனை (அலங்காரம்) செய்து கொள்ள. 178. அங்காடி - கடைத்தெரு.