பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதிக்குக் கண்ணனார் அறிவுறுத்திய காதை

117



25 தப்பாது கலயம் தாங்கிக் குடித்திடின் தடம்புரள் வண்டியின் தன்மை மான உடம்பு முழுதும் உருளும் தரையில் திடம்படக் கூறுவல் தெரிந்து கொண்மின். மோட்சம் வேண்டின் மூழ்கிக் கள்ளில்

30 நீச்சல் அடிப்பின் நிச்சயம் கிடைக்கும். என்னிடம் பாடம் இனிதுகேட் பீரோ என்னை ஆசானாய் ஏற்றுக் கொள்வீரோ? கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்று கதைப்பர் உலகோர்.

35 கள்ளுக் கடவுளின் 'கருணை' கிடைத்திடின் பள்ளு பாடும் பார்க்கும் பொருளெலாம். வஞ்ச மிலாஎன் வளமார் பாடல்உம் நெஞ்சை யள்ளும் நீரதைக் கேட்பீர்: "இப்போ தருந்தினேன் ஈந்தின் கள்ளொடு பனையின் கள்ளும்

40 தப்பிலாத் தெங்கின் கள்ளே தாள்களை வணங்குகின்றேன் அப்பனே ஆட்டுக் கறியே அன்புறு ஆறா மீனே எப்பொழு தும்மைக் காண்பேன் இறால்பொடி எம்பி ரானே" ஒருபாட் டுரைத்தேன் ஒப்பிலாக் கம்பரே மறுபாட்டுவேண்டா; மதுவினை அருந்தின்

45 ராமா யணக்கவி ராட்சசர் நீரும் கீமா யணமொன்று கிடுகிடெனப் பாடுவீர்! இரண்டு கம்பரும் இரண்டு நண்பரும் மிரண்டு மிரண்டென் மேனியை நோக்குவிர்; நீங்கள் நால்வரும் நில்லாது செல்வதை

50 நாங்கள் இருவரும் நனிதடுத் திடுவோம்;


26. தடம் புரள் - வழி தவறிய. 34. கதைப்பர் - கதையளம் பார்கள். 39.ஈந்து - ஈச்ச மரம். 42. இறால் - இறா.