பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதிக்குக் கண்ணனர் அறிவுறுத்திய காதை 121


   'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
   பாடல் சான்ற புலனெறி வழக்கம்'
   என்னுமோர் பகுதியந் நூலில் இருப்பதாம்.
130 கன்னியைக் களவிற் காண்டலும் புணர்தலும்
   உண்மையாய் நடைபெறும் உலகியல் அன்று.
   நாடக வழக்கென நவிலும் அந்நூல்
   நாடக வழக்கு நடைமுறைக் கொவ்வுமோ? மற்றும்,
   காதல் என்பது கருதற் பாற்று
135 காதல் வாழ்க்கை காணின் வியப்பாம்
   காதலர் பல்லோர் கண்டனர் தோல்வி
   காதலர் சிலரே கண்டனர் வெற்றி;
   இந்த வெற்றியும் எதிர்பாராததாம்
   எந்தக் காதலும் ஏற்கத் தகுமோ?
140 அழகை அடிப்படை யாகக் கொண்டு
   விழைகுவர் காதலர் ஒருவரை யொருவர்.
   ஈன்றவர் தேர்வோ எதிர்கால வாழ்விற்கு
   ஆன்ற அடிப்படை யாக அமையும்.
   இந்த நுட்பம் இளைஞர் அறியாமே
145 சொந்த வாழ்வைச் சோர்வுறச் செய்வதா?
   காதல் என்பது கடிமணம் புரிந்தபின்
   போதல் புரிந்திடும் பொருத்தமாம் சான்றுள
   என்னை மடவார் ஏசினும் ஏசுக
   என்னுடைக் கருத்தை இயம்புவல் யானே:
150 கொழுநன் செல்வனாய் கொழுத்திருந் தாலே
   விழுமம் பெறலாம் வேட்டவள் தன்னிடம்.
   தன்தாய் வீட்டினும் தகுதி குறைந்து
   நொந்த கணவனை நொய்ம்மையாய் நடத்தும்
   தோமுறு மகளிரின் தொகைபல; மற்றும்,

141. விழை குவர் - விரும்புவர். 143. ஈன்றவர் - பெற்ருே.ர். 143. ஆன்ற - சிறந்த 148. மடவார் - பெண்டிர். 150. கொழுநன் - கணவன். 151. விழுமம் - உயர்வு; வேட்டவள் - மனைவி. 158. நொய்ம்மையாய் - சிறுமையாய், அற்பமாய். 154. நோம்- குற்றம்.