பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7. அம்பிகாபதிக்கு மடல் வந்த காதை

வீட்டுமுற் றத்து வெளியில் ஒருநாள்
பாட்டொன் றிசைத்த படியம் பிகாபதி
நின்ற வேளையில் நீள்குழல் ஒருத்தி
சென்றங் கமராவதி சேர்க்க ஏவியதாய்க்

5 கூறி யொருமடல் கொடுத்துப் போந்தனள்.
அம்பிகா பதிதன் அறைக்குள் சென்று
மகிழ்ச்சி யோடு மடலைப் படித்துளம்
நெகிழ்ச்சி யுற்றனன் நீடவா வுடனே
படித்தனன் மீண்டும் படித்தனன் மேலும்;

10 துடித்தனன் நெஞ்சம் துள்ளினன் குதித்தனன்.
“அற்றைநள் எளிரவில் ஆரு மறியாமே
புற்றரைக் கன்னி மாடப் பொதும்பரில்
காண விரும்புவல் காலத் தோடவண்
மாண வருகென” மடலில் இருந்ததைப்

15 படித்துப் படித்துப் பரபரப் பெய்தினன்
அடுத்துச் செய்வ தறியா தாடினன்.
ஞாயிறே ஒல்லை மறைகென நவின்றனன்
காரிருள் கடிதில் வருகெனக் கரைந்தனன்
இன்னமும் மெல்ல இயங்கலா மோவெனக்

20 கன்னல் வட்டிலைக் கடிந்து கொண்டனன்
என்ன உடையணிந் தேகலாம், அவட்கே
என்ன நிறவுடை இனிக்குமென் றெண்ணினன்;
முதலில் பேசுதல் மொய்குழல் நங்கையா?
முதலில் வழங்கும் முத்தம் எவரது

3.. குழல் - கூந்தல். 5. மடல் - கடிதம். 11. அற்றை - அன்றைய; நள்ளிரவு - நடு இரவு. 13. புற்றரை - புல்தரை; பொதும்பர் - சோலை. 18. கரைந்தனன் - அழைத்தனன். 20. கன்னல் வட்டில் - நேரம் அறிவிக்கும் கருவி (கடிகாரம்).