பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அம்பிகாபதி காதல் காப்பியம்

துன்னற் கென்றே தந்தை சொல்லினும்
சிம்மன் அதனைச் செவியிற் கொள்ளான்;
எம்மனேர் இன்னதற் கென்றும் அஞ்சார்;

50 தான்கனி யாததைத் தடியா லடித்தே
யான்கனி விப்பேன் என்றுநம் பினனே.
‘அவன் தம்பி அங்கதன்’ எனுமாப் போல
அவன்பின் பிறந்த அரிவை தாரகையும்
அம்பிகா பதியை அடைதலை உறுதியாய்

55 நம்பி யிருந்தனள் நாளெதிர் பார்த்தே.

47. துன்னற்க - செல்லாதே. 49. எம்மனேர் - எம்மைப் போன்றோர்.