பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அமைச்சன் குடும்பொடு சூழ்ந்த காதை

63

(கமலி வருதல்)

25 கமலி வந்து கணவற் குரைப்பாள்:
ஞமலியின் ஞரலென ஞயமே யின்றியும்
பெண்மணி யென்று பெட்பு செயாதும்
கண்மணி தாரகை கலங்கக் கடிந்துரைத்து
அம்பிகாபதி நெருநல் அலறச் செய்ததாய்த்

30 தாரகை என்னிடம் தனித்துக் கூறினள்.
யாரது பொறுப்பர் மறிவினை யாதென
வெந்த புண்ணில் வேலினைப் பாய்ச்ச
நொந்த வுளத்தனாய் நொடித்துக் கூறுவான்:

(காடவன் கூறுதல்)

எந்தம் மக்கள் இருவரும் காதல்

35 தந்த துயரால் தவநனி வாடுவர்.
இவர்தமை ஏய்த்தே இழிவு செய்த
அவர்தமைச் செக்கின் எள்ளென ஆட்டுவல்:
சிம்மனுக் கமரா வதியாம் சிறுக்கியும்
தாரகைக் கம்பிகா பதியாம் தருக்கனும்

40 கிடைத்தில ரேனும் கிடக்க ஒருபால்;
மடைத் தலைக் கயலென மாட்டுவர் ஒருநாள்.
இம்மையில் இருவரும் மணப்ப தேது?
அம்மையில் ஒருகால் ஆகலாம் இவர்மணம்
என்றுதன் மக்கள் மனையிடம் இயம்பிச்

45 சென்றனன் எழுந்து சினத்தொடு வெளியே.
கன்னி மாடக் காவிற் கினிநீ

26. ஞமலி - காய்; ஞரல் - ஒலி (குரைத்தல்); ஞயம் - நயம் 29. நெருநல் - நேற்று. 31. மறிவினை - பதிலுக்குச் செய்யும் செயல். 95. தவ நனி - மிக மிக. 38. சிறுக்கி - சிறிய குணம் படைத்தவள்.சிறு பெண். 39. தருக்கன் - இறுமாப்பு உடையவன். 40. கிடக்க - ஒரு பால் கிடக்கட்டும் ஒரு பக்கம். .ே இம்மை - இப் பிறப்பு. 43. அம்மை - மறு பிறப்பு ; ஒரு கால் - ஒரு வேளை.