பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர் பாராட்டுக் காதை

85

 

காமுகி யென்று கருது வாரோ?
அட்டி யின்றி அவரையான் புல்லின்
கட்டி அணைத்துக் கன்னஞ் சுவைப்பரோ!
கன்னத்தில் முத்தம் 'கடகட'என்றவர்

30 எண்ணிக்கை யின்றி ஈந்துகொண் டிருப்பரோ!
கன்னங் கடித்துக் காயமுண் டாக்கின்
என்னடி காயம் என்றென் அன்னை
வினவிடின் யான்பதில் என்ன விடுப்பனே.
நினைவுறுங் காலையென் நெஞ்சம் நடுங்கும்.

35அச்சார முத்தம் அளிக்கவோ யானும்?
எச்சார்பு மின்றி எங்ங்ணம் இயங்குவேன்
அச்சங் கொள்கிறேன் அனைத்தும் எண்ணி.
இதழோ டிதழ்சுவைத் தின்பவூற்றுறிஞ்சின்
இதழ்தான் சிதையின் என்ன செய்குவேன்.

40அணைக்கையில் முலைகள் ஆடவர் ஒருவரின்
பிணிக்கும் மார்பில் பிணைபடல் கொடுமை!
துவர்மணி பூண்டவென் தூய மார்பில்
அவர்கை படினென் அரையுயிர் போய்விடும்;
உறுப்புறவு கொளுங்கால் உடையது விலக

45உறுப்புத் தெரியவே உயிர்முழு தேகிடும்.
பெண்ணாய்ப் பிறந்து பீடிழப் பதனினும்
மண்ணாய் மடிந்து மக்குதல் நன்றே.
எனினும் ஆணும் பெண்ணும் இணைந்து
நனியில் வாழ்க்கை நடத்துதல் மரபே.

50இதற்கியான் விதிவிலக் கில்லை யாதலின்
முதற்கண் கணவரைத் தேர்தல் முறையே
அதற்குத் தக்கவர் அம்பிகா பதியே.


37. அட்டி - தடை, புல்லின் தழுவினால் 38. இகழ் - உதடு, இன்ப ஊற்று - உதட்டில் ஊறிக் கசியும் இன்ப அமிழ்தம். 40. ஆடவர் - ஆண், 41 பிணிக்கும் - தழுவிக் கட்டிடும்; பிணைபடல் - இறுக்கமாய் இணைதல். 42. துவர்மணி - பவளமணி. 46. பீடு - பெருமை. 49. நனி - மிக; இல் வாழ்க்கை - குடும்ப வாழ்க்கை. 52. தேர்தல் - தேர்ந்தெடுத்தல்.