உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ.18

129

யங்கும் டியூக்கும் மட்டிலுமே காட்சியளித்தனர். மாட்டிங்கிலி அந்தரத்தில் "நீந்திய“ காட்சியைத் தொலைக்காட்சியில் காண அவர் துணைவியார் (எட்டுத் திங்கள் சூல் நிரம்பியவர்) தலைமை நிலையத்திற்கு வந்திருந்தார். விண்வெளிக் கப்பலிலிருந்து மாட்டிங்கிலி வெளி வந்தபோது தொலைக்காட்சியில் முதலில் அவரது கால்கள் தெரிந்தன. பின்னர். அவரது உடல் தெரித்தது. வேகமாகச் சென்று கொண்டிருந்த தாய்க்கப்பலுடன் கூடவே அவர் தலைகீழாகப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. அவருக்குப் பின்னால் அவரைப் பிணைத்திருந்த கயிறும், தாய்க்கப்பலின் சாளரம் ஒன்றின் மூலம் அவரையே நோக்கிக் கொண்டிருந்த மற்ற இரு விண்வெளி வீரர்களின் முகங்களும் தொலைக்காட்சிப் படத்தின் ஒரு மூலையில் தெரிந்தன.

அப்போலோ-16 இன் தாய்க் கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் பசிபிக் மாகடலில் ஹோனலுலு தீவுக்குத் தெற்கே 2400 கி. மீ. தொலைவில் இறங்கியது. இந்த இடத்திலிருந்து 1. 6 கி. மீ. தொலைவில் மீட்புக் கப்பல் காத்திருந்தது. தாய்க் கப்பல் கடலில் இறங்கிய காட்சியைத் தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர் பல்லாயிரக்கணக்கான மக்கள்.

இந்த அப்போலோ - 16 இன் பயணம் 44.5 கோடி டாலர் (311. 5 கோடி ரூபாய்) செலவில் மேற்கொள்ளப் பெற்றது. பயணம் செய்த நேரம் 266 மணி (11 நாள் - 2 மணி) பயணம் செய்த தூரம் 22,25,600 கி. மீ. தாய்க்கப்பல் பூமியைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தின் வழியாக வந்த போது அதன் வேகம் மணிக்கு 39,699 கி.மீ. (24,183 மைல்). விண்வெளி வீரர்கள் அம்புலியினின்றும் சேகரித்துவந்த, நிலாக் கற்களின் எடை 110 கிலோ கிராம். இதனுள் 18கிலோ எடையுள்ள ஒரு பெரிய பாறையும் அடங்கும்.

விண்வெளி வீரர்கள் அம்புலியில் விட்டுவந்த 'ஓரியன்' அம்புலியை 343 நாட்கள் வட்டமிட்டு வரும். இறுதியில் அம்புலியில் வீழ்ந்து நொறுங்கும். இதனைத் தவிர இவர்கள்

அ-9