பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 27 தக்கன் யாகம் செய்யுமிடத்தில் அன்னை சென்ற போது அவன் ஏறெடுத்தும் காணவில்லை; மதிக்கவில்லை; பேசவும் இல்லை! உடனே அன்னை சீற்றமுற்றாள். அவள் சீற்றத் தினைக் கந்த புராணம் காட்டிய வழி நம்மை நடுங்க வைக்கிறது. அம்மை சீற்றங்கொள யாவும் நடுங்கினநலனழிந்தன. "கீற்றமாய் தீச்செல உயிர்ப்பொடே க்ாற்றினோ டழல் கலந்த தாமென தோற்றி அண்டமும் தொலைவில் ஆழியும் மாற்ற வானெழிஇ மல்கி ஓங்கவே. (உமைவரு படலம் 30) பாரும் உட்கின பரவு பெளவமும் நீரும் உட்கின நெருப்பும் உடகின. காரும் உட்கின. கரிகள் உட்கின ஆரும் உட்கினர் அமரரா யுளோர். (உமைவரு படலம் 40) அருகிருந்த தோழி கருணையே வடிவான அன்னைக்கு இச்சீற்றம் பொருந்துமோ எனக் கேட்கின்றாள். 'ஞாலம் யாவையும் நல்கும் உன்றனுக்கு ஏலு கின்றதோ இனைய சீற்றமே' (உமைவரு படலம் 41) என்பது அவள் வாக்கு. மேலும் நீயே சீற்றம் கொண்டால் உய்யார் யார்? உதவுவார் யார் என்று கேட்கின்றாள். மைந்தர் யாரையும் வளங்கள் தம்முடன் தந்து நல்கிய தாய் சினங்கொளா அந்த மாற்றுவான் அமைந்துளாய் எனில் உய்ந்திடும் திறம் உண்டு போலுமால்' . (உமைவரு படலம் 43) என்கிறாள்.