பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 5t. இறைவன்ைத் தந்தையாக-அப்பனாக மட்டுமின்றிக் குழந்தையாகக் கொள்வதை முன்னரே காட்டியுள்ளோம். ஈண்டும் ஆழ்வார் பாடல்கள் எண்ணத்தக்கன. இறை வனைக் குழந்தையாகப் பெரியாழ்வார் நினைத்து அவனைத் தொட்டிலில் இட்டுத் தாலேலோ பாடுகிறார். "மாணிக்கம் கட்டி வயிரக் கிடைகட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ' என்பது அவர் வாக்கு இவ்வாறே நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உண்ணாயே' எனப் பால் உண்ண அழைத்தும், தேனில் இயை பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்' என்று பூச்சூட்ட அழைத்தும் மகிழ் கின்றார். இனி, நாம் இறைவனை எண்ணுங்கால் அரியாகவும் அரனாகவும் காண்கின்றோம். கம்பரோ அரனதிகள் உலகளந்த அரிஅதிகன் என்றுரைக்கும் அறிவிலார்’ என் வேறுபாடு கற்பிப்போரை அறிவிலார் என்கின்றார். 'அரியலால் தேவியில்லை ஆறன் ஐயாறனாற்கே என்று அப்பர் இருவரையும் சிவனும் சக்தியுமாகக்காண்கின்றார். பொய்கை ஆழ்வார், 'ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் அடர்த்தான் - மார் படர்த்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் சாற்று ஒருபால் மங்கையாள் பூமகளான் வார்சடையான் - . - . நீள்முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு என இருவரையும் இணைத்துப் பாடிப் பரவுகின்றார்.