பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 6ı நிலையில்-இறைவன் தடுக்க முற்படுவான். மிகத் தருக்கி வாழ்வோர் முன் தானே வந்து தகைந்து-தடிந்து-அருள் செய்வான். திருமாலின் பத்து அவதாரங்களும் அப்படியே! சிவனுடைய திருவிளையாடல்களும் அத்தகையனவே! அவற்றுள் ஒன்றே தாருகாவனத்து முனிவர்களையும் அவர்தம் மனைவியரையும் அடித்துத் திருத்தியமை. நான் முதலிலேயே சொல்லியபடி அடித்தல் என்பது கோல் கொண்டு அடித்தல் மட்டுமன்று; சொல்லடி போன்ற பிறவும் அதனுள் அமையும். இங்கேயும் அத்தகைய செயலே காட்டப் பெறுகின்றது. தாருகாவனத்து ரிஷிகள் தாமே தவத்தில் உயர்ந்த வரென்றும் தம்மினும் மிக்கார் ஒருவரும் இலர் என்றும் தருக்கு மிக்கு வாழ்ந்து வந்தனர். அப்படியே அவர்தம் மனைவியரும் தாமே கற்பிற் சிறந்தவர் என்றும் வேறு யாரும் தமக்கு நிகர் இல்லை எனவும் தருக்கி வாழ்ந்தனர். அந்தத் தருக்கு வளர்ந்திருந்தால் என்னாகுமோ! யார் அறிவார்! ஆம்! இறைவன் அறிந்தான். அந்த அகந்தையை நீக்க முனைந்தான். திருமால் பெண் உருவம் கொண்டு ரிஷிகள் முன் செல்ல அவர்கள் மயங்கி, தவம் விட்டு அவர் பின் வந்தனர். மனையிலுள்ள மனைவியர் முன் சிவன் பிச்சை ஏற்பாராகச் சென்று அவர் வளைகளைக் கொண்டு, அவர் தருக்கழித்து உதவினார். இறைவனோடு அவர்கள் பேசியவற்றைப் பரஞ்சோதியார் அழகுறக் காட்டுவார். அவர் வாக்கினை அப்படியே தருகிறேன். சொற்கள் சிலேடையாக அமைகின்றன. இறைவன் பிச்சாண்டியாக அவர்கள் வீதியில் செல்ல அனைவரும் வீட்டிலிருந்து புறம்போந்து, கலைநெகிழ, வளைகழல, அவர் வடிவில் மயங்கி, தம் கற்பினைக் காற்றில் பறக்க விட்டு அவரைப் பின் தொடர்கின்றனர். அவர்தம் பேச்சுக்களைப் பாடல்களில் காணலாம்,